பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

21

கோட்டுக் களிற்றை முகத்தடக்கிக் கொடுவாய்ப் புலிக்குப் பல்லெடுத்துக் குவடுங் காவும் மிதித்தெழுந்த - குலமும் புலமும் நினதன்றே! காட்டுக் குறத்தி மலைமுகட்டைக் கயிற்றால் தாவி அடைதேறல் கையாற் பிழிந்து மகற்களிக்கும் கதையும் வழக்கும் நினதன்றே! வேட்டுக் குழற்கே அஞ்சுவதோ? வெற்பா, மலையா, குறவா,உன் விளையாட் டெல்லாம் போரன்றோ? வெற்றி நின்தோள் தொடையன்றோ? மூட்டுக் கொண்ட என்புநிமிர்! - முறுக்கே றட்டும் நின்கைகள்! மூவா இளமைத் தமிழ்மகனே! முனைவாய், எழுக, எழுகவே! -9

கறங்குக முரசம்! வெண்சங்கம்! கரடிகை பம்பை உறுமுகவே! காட்டுப் புலியே! நீவளர்த்த -- கன்னித் தமிழ்க்குன் உயிர்செகுப்பாய்! பிறங்குக நின்பேர்! திறம்பூண்க! பெரிதோ பிறன்கை வெண் சோறு! பிறந்தாய் அன்றே இறந்தாய்நீ! பேசா அடிமை வாழ்வதுவோ! இறங்குக உரிமைத் தனிப்போரில்!. ஏடா! இளமைத் தமிழ்மகனே! இறப்பினும் சுவையோ இழிவாழ்க்கை? இருகண் மூடிச் செவிமூடி , உறங்குதல் நன்றோ இதுபோழ்தே ! உணர்வாய் எழுக எழுகவே! ஒட்டாப் போக்கை உடன்வெட்டி உகுப்பாய்! எழுக எழுகவே! - 10

- #959