பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

15

23

அன்றிருந்த அறவல்லார் யாத்துத் தந்த அறமெங்கே? பொருளெங்கே? இன்ப மெங்கே? குன்றிருந்த விளக்கெனவே உலகோர்க் கீந்த குறள்நெறிக்கு நடைமாறாத் தமிழன் எங்கே? இன்றிருந்த நாகரிகப் போலிப் போக்கின், இழிநிலைக்கு முடிவெங்கே? விடிவு மெங்கே? மன்றிருந்த தமிழெங்கே? அதுபோ மாயின் மறுநொடியில் நானெங்கே? நீதான் எங்கே?

- 1959

கடலே, சீறாயோ?

தனித்திருந்த செந்தமிழ்த்தாய் அரசிருக்க, தகுவேந்தர் நிழற்கீழ்த் தங்கி, இனித்திருந்த தமிழகத்தை விழுங்கினையே இருங்கடலே! எவர்சொன் னாலும் - இனித்திருந்தார்; இழிவகற்றார்; இனியுய்யார்; எந்தமிழர் இந்த நாளில்! . . . . முனித்தெழுந்து சீறாயோ? மூழ்க்காயோ? முன்வினைக்குக் கழுவா யென்றே:

- ? 859