பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

24

செய்குவீர் இன்றே!

'முத்துக் கொழித்ததும் யாங்கள் - கடல் மீதில் மரக்கலம் விட்டதும் யாங்கள்! சித்துப் பயின்றவ ரெம்மோர் - பெருஞ் சீருஞ் சிறப்பொடும் வாழ்ந்தவர் முன்னோர்! மெத்த இலக்கியங் கண்டோர், - என மேன்மைப் புகழுரை பற்பல கூறி எத்தித் திரிந்திடு வோரே - இவ்

வேழை இயம்பிடும் நல்லுரை கேட்பீர்!

தாயை அழுதிட வைத்தீர் - அவள் தண்டமிழ் நாவிற் றுளைபல செய்தீர்; பேயை அரியனை வைத்தீர் - அவள் பேசும் இழிமொழிக் காடவுஞ் செய்தீர்; காயைக் கனியென்று கொண்டீர் - கருங் கல்லை மலரென்று நுகரவுஞ் செய்தீர்; ஆயுந் தமிழ்ப்புல வோரை - நகை யாடி வருகுவீர் ஏதுரை சொல்வேன்?

புன்மை மொழிபல சொல்வீர் - பல பொய்மைச் செயல்பல நாளுமே செய்வீர்; மென்மை உளத்தினை விட்டீர் - அறம்

மேவும் பணிகளின் மேன்மை மறந்தீர்;

வன்மைத் திறங்களு மின்றி - நல் வாழ்வுப் பயன்களும் உயர்வது மின்றி, முன்மைத் தமிழரைப் பற்றி - வாய் முரசறைந் தேசெயல் முற்றுந் துறந்தீர்!

கற்றவ ருஞ்செயலற்றார் - எனிற் கல்வியில் லாதவர் விளைவெது காண்பார்? பெற்றவர் காத்திடாப் பிள்ளை - பிறர் பேணுவ தால்வளர்ந் தோங்கிடல் இல்லை! பற்றுக் குறைந்தது நாட்டில் - தமிழ் பண்டைத் திறத்தினில் சிதைந்தது முற்றும்; உற்ற புலவரை நாடி - தமிழ் உய்ந்திடும் வகையினுக் கானவை செய்வீர்!