பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

38

கனிச்சாறு இரண்டாம் தொகுதி

ஆர்வலர் செந்தமிழ் ஆண்மையர் முன்வரும் ஆர்படைக்குஞ் சோர்விலர்! தாழ்விலர்! சோற்றுக்கு மானந் தணைவிடுக்கார்! ஏர்வலர்! வாழ்க்கைத் தொழில்வலர்! அன்னார் எழுந்துவிட்டால் போர்வலர் ஆயினும் பொன்றுவர்; என்றங்குப் போயுரைமே! 9

குமரிநீ ராடிக் குளிர்ந்தகுற் றாலப்

புனலருந்தி - இமையப் பொருவரைக் கேகுங் குரங்குகாள்! எந்தமிழ்நாட் - டமைவினை வேண்டினர் ஆயிர மாயிரஞ் செந்தமிழர்; - - தமைத்தவிர்த் தீர்;தவிர்த் தீர்உயிர்! என்றே

தகவுரைமே! - 1963

தமிழ்த் தொண்டர்க்கு...!

மட்டென்று செந்தமிழை எண்ணி, மதித்திலர்முன் சட்டென்று தாவுக, தாழ்வைச் சரிசெய்க! பட்டென்றே உண்மை பகர்ந்திடுக; பாடின்றேல் வெட்டொன்று துண்டிரண்டாய்ப் பேசி,வெலவெலக்கக் குட்டொன்று குட்டி, அவர் கூனை நிமிர்த்திடுக! தட்டொன்றால் உள்ளம் விழிப்பார் தமையணைக்க! சுட்டொன்றாப், போக்கில் சுழலும் மடவோரை விட்டகன்று செல்க! விழலுக் கிறையற்க! எட்டுனையும் ஒப்பாதிடும்பை விளைப்பாரைக் கட்டொன்றாய்க் கட்டிக் கடலில் எறிந்திடுக! கட்ட்ெரின் றழியாத கன்னித் தமிழ்தாங்கும் முட்டொன்றாய் நிற்க முனைந்து! . . - 1963