பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

37

பார்க்கு மிடந்தொறும் நெல்முதிர் பைம்பயிர் சூழ்வயல்கள்! - - - ஆர்க்குஞ் செழுங்கடல் முப்புறம்! வானில் அகன்மலைகள்! ஈர்க்கும் பிறன்பொருள் வேண்டுவ தில்லை;யிங்கு ஈநுழைமோ? - .' ஆர்க்குமிங் கஞ்சுதல் இல்லையென் பீரந்த ஆளுநர்க்கே! "

வல்லன் அமெரிக்க னோபிற னோவரும் வாய்ப்பிருப்பின் - - வெல்லரி தென்றே விளம்புவர் கோழையர், வீழ்ச்சியெனின் சொல்லலும்,வேண்டுமோ? நீணிலம் முற்றுமே. சேர்ந்தொழிமே! - அல்லல் விளைப்பவன் தானும் அழிமென் றவர்க்குரைமே!

ஊரை வளைத்தே உணர்வழித் தான்றோர்

உயர்வழித்துச் சீரையழித்து மொழியை யழித்துச் சிறப்பழித்துப் - . . பேரை யழித்துப் பிழைப்பழித் தேயினம் பின்னழிக்க

ஆர்ை நினைத்திவண் அண்டினர் என்றே அறைகுவிரே! -

இணங்கார் எனின்தமிழ்க் காளையர் தோள்கள்

எழுந்தெதிர்க்கும்:

வனங்கார் எனின்தமிழ்ப் பெண்டிர் மலர்க்கைகள் வாளெடுக்கும்! .

நிணங்காண் தசைகாண்! குருதியின் செந்நிறங்

காண்எதிர்த்தார்! - - - பிணங்காண் எரிகாண்! பொடிகரண் பின்னெழும் பைந்தமிழே!