பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

43

ஒற்றைத் தனித்தமிழன் உள்ளவரை, யாம்கற்ற அற்றைத் தமிழின் அகரமுதல் உள்ளவரை- 130 தாயின் மடியிறுத்தி ஆகத் தணைத்துவந்து வாயின் அமிழ்தும், வளர்நெஞ்சில் முத்தமிழும் ஊட்டியவள் எண்ணம்எம் உள்ளத்தே உள்ளவரை மூட்டியதோர் நல்லுனர்வெம் மூச்சில் இயங்குவரைஅன்னைத் தமிழின் அரியணையில் இந்தியெனும் பின்னை முகடியாம் பேதைக் கிடமளியோம்!"

ஒரிரண்டு கொள்கை உடும்புப் பிடியாலே ஊரிரண்டு பண்ணி ஒருநூறு தோற்றமாய்க் காட்சிதரும் கட்சித் தலைவர்களே! உங்கட்கும், மீட்சியற்றுச் சாகும் தமிழர்க்கும் மீண்டுரைப்போம்; 140

அன்னை மொழிவீழ்ச்சி அவ்வினத்தின் வீழ்ச்சி,இதை முன்னை வரலாறு மெய்ப்பிக்கும்; முத்தமிழீர்! தாய்மொழிக்குக் காப்புரிமை வாங்கத் தகைமையால் வாய்மொழிக்குப் பூட்டிட்டார் என்னும் வரலாறே

ஈழத்தில் இக்கால் இருக்குநிலை! செந்தமிழீர்! :

வாழத்தான் வேண்டுமெனில் நந்தமிழ்க்கு வாழ்வளிப்பீர்!

இன்றேல் தமிழர் இனமழிவ தெஃகுறுதி!

நன்றே அறிகுவீர்! நாளை அழிந்தொழிiர்! இந்திமொழிக் கென்றும் இடமளியீர்! நல்மறவீர்! எந்தமிழைக் காப்பீர்! இணைந்து! 150

- 1963