பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

47.

தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர்.

தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர் இருக்கின்றார் - அவர் தமிழர்களின் தாலிகளை அறுக்கின்றார்!

உமிழ்ந்ததெல்லாம் நக்கித்தின்னும் நாய்கள் - மேல் உள்ளவர்க்குக் காட்டிக்கொடுக்கும் பேய்கள்! (தமிழ்)

கற்றவர்போல் நடிக்கும்;பழகும் ஒன்றி - ஒரு காசுக்காக மலமும் தின்னும் பன்றி! உற்றவர்போல் பேணி வரினும் பழுதை - நன்றி உணர்விலாது கெடுக்கப் பார்க்கும் கழுதை! (தமிழ்)

கட்சிபேசும் தலைமை தாங்கும் தமிழால் - பெருங் கயவர்களின் கூட்டஞ் சேர்க்கும் தமிழால்! எச்சிலைக்கு நாக்கை நீட்டிப் படுக்கும் - மேல் இருப்பவர்க்கே இனத்தைக் காட்டிக் கொடுக்கும்! தமிழ்)

அழைப்பிலாது நமது வீட்டை நண்ணும் - மெய் அன்பன்போலச் சுவைக்கச் சுவைக்கத் தின்னும்! உழைப்பிலாது பிழைக்கப் பார்க்கும் ஒரி - தமிழ்க்(கு)

ஊறுசெய்யும் முன்னை யுள்ளம் மாறி! (தமிழ்) 'மக்கள்போல்வர் கயவர்'என்பர் குறளார்! - அவர் மாண்பறியார்; கீழ்மை நெஞ்ச இருளார்! குக்கல்போல வாழ்வார்; கொள்கைக் குள்ளர் - நாளும் குறும்புபேசித் திரிவர்; பொய்மைக் கள்ளர்! (தமிழ்)

- 1963