பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32.

33

பகையே விலகுக!

ஆர்த்த முரசொடு கொம்பும் முழங்க அருந்தமிழர் சீர்த்தி விளங்க நெடுங்கொடி தூக்கிச் செறுவிழிவேல் கூர்த்த மறவர் களிற்றொடும் போந்தார்! குலைநடுங்கிப், போர்த்த இருளே, பகையே, விலகுக பொக்கெனவே! -

- 1963

அடிமைக் கூட்டம்!

- நாயடிமை செய்பவராய்த் தமிழரெல்லாம்

நலிகையிலே, அமைச்சரெல்லாம். போயடிமை செய்கின்றார் வடவர்க்கே: அவர் வாய்ச்சொல் தலைமேற் கொண்டே! வாயடிமை கொண்ட தமிழ்த் தல்ைவரெல்லாம் முழங்கிடுவார் வளர்ச்சி காணார் . . . . . தாயடிமை புறக்கண்டும் அவள்மானம்

விலைபோக்கும் தகைமை யோரே!

- 1964