பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

செந்தமிழைச் சாய்த்தான்;தின் சீருடலைச் சாய்த்துவிட்டான்;

முந்திவிட்டான்; நின்னையவன் மூக்கரிந்து கொண்டுசென்றான்.

பாட்டனவன் வாளும் பரணிருக்கும்; நீ,மறந்தாய்! நீட்டி யிருப்பின் நினைவிழந்து போயிருப்பான். அப்பனவன் வேலும் அருகிற் கிடந்திருக்கும்! ஒப்புக்குக் காட்டினையேல் ஓடி உயிர்குலைவான்! வேலொடித்த கையால் ... - விரலொடித்துப் போட்டிருந்தால், ஆலொடிந்து சாய்ந்ததுபோல் ஐயனே நீகிடவாய்! 70

வ்ாய்மொழிக்குத் தானே வரம்பிட்டான் என்றிருந்தாய்!

வாய்மொழிக்குப் பூட்டிட்டே வல்லுயிரின் தாழ்திறந்தான்!

தாய்மொழிக்குத் தானே

தடைபோட்டான் என்றிருந்தாய்!

தாய்மொழியைத் தான்தடுத்துத் தன்னுயிர்க்குக் காவலிட்டான்! ' ' . . . . . . துர்க்குங் களிற்றுத் துதிக்கைத் தடங்கையனே!

தாக்கும் நரிக்குத் தலைகவிழ்ந்து போனாயே |

என்ன,அடா பாட்டிசைப்பேன்?

என்னென்று சீர்குறிப்பேன்?

என்னெழுதும் நெஞ்சம் எழுத்தாணிக் கர்மழுங்கும். பொன்னுருக்கி வார்த்துப் புதுத்தகடாய் நீளடித்துப்

பன்மணியால் சொல்லமைத்துப்

பச்சைமணிப் பாட்டமைத்து, 80

முத்தெடுத்துக் கோத்து முழுப்பாட்டு நின்றெழுதிப் பித்தேறச் சூழ்ந்து பிழையில்லாப் பாட்டெழுதி,

நின்பெரும்ை பாட நின்னத்திருந்தேன், செந்தமிழா!

நின்பெருமை பாட நினைத்திருக்கும் போழ்தினிலே, குத்துண்டு போனாய்! குலைநடுங்கிக் கீழ்சாய்ந்தாய்! கத்துண்ட தொண்டை கரகரக்கும் வேளையிலே,