பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

55 ...

குத்தவரும் வேலின் குறிதடுக்கும் மார்பினிலே - தொத்தவரும் பைங்கிளிமார் தோய்ந்துறங்கும் தோளினிலே பார்த்திருந்த நின்பகைவர் பாய்ச்சினரே கூரம்பை ! காத்திருந்த மாற்றார்க்குக் காணுவழி வேறிலையே!

கொல்லன் வடித்தீந்த அம்புக்குக் கூர்பார்க்க வல்லனே நின்கை வடுப்படுவ தல்லாது - காந்தள் மலர்க்கைக் கயல்விழியால் கூருகிரால் ஏந்துகின்ற மார்பில் எடுத்தவடு வல்லாது - 40 நின்றோள் வடுப்படவும் நேர்ந்த கதையறியேன், அன்றோகாண் நின்பெருமை! ஆரே இனியுரைப்பார்?

பூரித்த தோள்கள் பொலிவிழந்து போயினவோ? ஏரித் தடங்கரையை இங்குவந்து யாருடைத்தார்: முக்கழகச் சீர்மை முழுதலரும் என்றிருந்தேன். முக்கழகச் சீர்மை முழுதலரும் என்றிருக்கத் தக்கபடி வந்தான் தலையரிந்து கொண்டிருப்பான்; ஒக்கபடி வந்தான் உடலரிந்து கொண்டிருப்பான்!

முத்தமிழ்க்குக் காப்பாக முன்னிற்பாய் என்றிருந்தேன்! முத்தமிழ்க்குக் காப்பாக முன்னிற்பாய் என்றிருக்கப் 50 பித்தனவன் வந்தான் பிணமாக வீழ்த்திவிட்டான்! எத்தனவன் என்றறியேன், ஏமம் விளைத்தறியேன்!

பொய்யன்று; துரங்கும் புலியென்று நானிருந்தேன்; கொய்யென்று நின்தலையைக் கொய்தான்; உறங்கினையே! ஆளழகு மட்டுமிலை; ஆணரிமா என்றிருந்தேன்! தோளழகு மாளத் தொடுத்தகணை பாய்ச்சிவிட்டான். பில்குதமிழ்த் தேன்டா பிலிற்றும் புலவரொடு, மல்குதமிழ் வேந்தன் மறைமலைகள் காத்திருந்தும், பல்குதமிழ் ஆய்ந்துவரும் பாவாணர் காத்திருந்தும்,

நல்குதமிழ்ப் பாவேந்தன் நாட்டுவிழி பார்த்திருந்தும்,

ஒரா யிரமறவர் ஒச்சியவாள் வீச்சிருந்தும், - ஆரோ வெறியன் அடிவெட்டி வீழ்த்திவிட்டான்!