பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

58

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

தாய்மொழியைப் பேணார் தரைமூடிப் போதற்கே, வாய்மொழியைக் காவாதார் வாழ்விழந்து போதற்கேஉன்றன் பிணமே உறுகரியாம்! வல்சான்றாம்! குன்றுபோல் வீழ்ந்திருக்கும் கொல்களிறே! நாணுடைத்தே!

- 1964

கவல் கொள்ளாரே!

வெட்டுகின்ற வெட்டொன்றாய்த் துண்டிரண்டாய் மெய்க்கருத்தை விளங்கப் பேசி முட்டுகின்ற இடர்மலைக்கும் மூள்கின்ற பெருஞ்சுழற்கும் துணிந்தார், மூடர் கட்டுகின்ற பொய்யுரைக்கும் அவிழ்க்கின்ற புளுகுரைக்கும் கயவர் பாங்கில் கொட்டுகின்ற வாய்ப்பறைக்கும் செவிகொடுக்கார்; விடையிறுக்கார்; கவல்கொள் ளாரே! -

- 1965