பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

5


இவர் நூலின் மறைத் தன்மையும், இவருக்குத் திருமை (தெய்வத்தன்மை) யுண்டாக்கியதினால், இவர் பெயர்க்கு முன் திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பெற்றது. தேவர், தெய்வப் புலவர், பொய்யில் புலவர், முதற்பாவலர், பெருநாவலர், செந்நாப்போதார், நாயனார் முதலிய பிற பெயர்களெல்லாம், இவரைப் பாராட்டிக் கூறிய புலவர் ஆண்ட புகழ்ச் சொற்களேயன்றி வேறல்ல.

வள்ளுவன் என்பது இயற்பெயராகவு மிருக்கலாம்; தொழில்பற்றிய பெயராகவுமிருக்கலாம். திருவள்ளுவர் பெயர் இவற்றுட் பின்னதென்பதே பெரும்பான்மைப் பொருத்தமாம்

வள்ளுவன் என்பான். அரசன் கட்டளையைப் பறையறைந்து அறிவிப்பவன் என்று பெருங்கதையும், அரசர்க்கு உள்படு கருமத் தலைவன் என்று பிங்கல நிகண்டும். புள்ளுவன் (நிமித்திகன்) என்று சீவக சிந்தாமணியும் கூறுகின்றன.

வள் என்னும் அடிச்சொற்குள்ள பல பொருள்களுள் மூன்று, கூர்மை வலிமை வண்மை என்பன. ஆதலால், வள்ளுவன் என்னும் சொற்கு, கூர்மதியன், வல்லவன், வள்ளியோன் என்று முப்பொருளும் கொள்ளலாம்.

“ஏற்றுரி போர்த்த விடியுறழ் தழங்குகுரற்
கோற்றொழில் வேந்தன் கொற்ற முரசம்
பெரும்பணைக் கொட்டிலு ளரும்பலி யோச்சி
முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சித்
திருநாள் படைநாள் கடிநா ளென்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கதையாச்
செல்வச் சேனை வள்ளுவ முதுமக” (பெருங்.2:28-34)

என்று பெருங்கதை கூறுவதால், வேத்தியல் விளம்பர அதிகாரியான வள்ளுவன் பெருமை விளங்கும். (முதுமகன் முப்பதாண்டிற்கு மேற்பட்டவன்) இவனையே பிங்கல நிகண்டு

“வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னர்க்
குள்படு கருமத் தலைவர்க் கொன்றும்” (5:118)

என்று உள்படுக்கருமத் தலைவருள் ஒருவனாகக் குறிக்கும். வள்ளுவன் அரசன் கட்டளையையே முரசறைந் தறிவிப்பவன்: சாக்கையன் அரசர்க்கே