பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

திருக்குறள்

தமிழ் மரபுரை


“பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே” (பொருள்.21)

“எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது” (பொருள்.21)


என அறம்பொரு ளின்பங்கள் தனித்தனியாகவும், "மூன்றன் பகுதியும்" (அகத். 41) எனத் தொகுத்தும், அகப்பொரு ளிலக்கணத்திற் கூறப்பட்டிருப்பதால், எல்லார்க்கும் பொதுவான இருவகை வாழ்க்கைக்குமுரிய அறநூற் பாகுபாடும் புலவரே செய்யும் இலக்கண ஆராய்ச்சிக்குரிய பொருளதிகாரப் பாகுபாடும். வெவ்வேறு நூலன வென்றும் வெவ்வேறு பயனோக்கியன வென்றும் அறிந்துகொள்க. மூன்றன் பகுதியாவது அறத்தாற் பொருளீட்டி அப் பொருளால் இன்பம் நுகர்வேன் எனல். இதனால் அறநூற் பாகுபாடு தமிழரதே என்று தெளிக.

தமிழ நாகரிகத்தின் சிறந்த கூறுகளையெல்லாம் தழுவிக்கொண்டு அவற்றைத் தமவெனக் கூறல், ஆரியரின் தொன்றுதொட்ட வழக்கமே. அறம்பொரு ளின்பம் வீடெனத் தமிழற நூலார் வகுத்த பொருட்பாகுபாட்டையே இலக்கண நூலார் இன்பம் அகமென்றும் ஏனை மூன்றும் அஃதல் லாத புறமென்றும் இரண்டுள் அடக்கி மாற்றி வகுத்தனர் என்க. இதை யுணர்த்தற்கே.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
...........................
காமக் கூட்டங் காணுங் காலை” (1038)

என்று தொல்காப்பியங் கூறியதும் என அறிக. முழுத் தமிழிலக்கணந் தோன்றியது தலைக்கழகக் காலம் (கி.மு. 10,000). அது தோன்றிய போதே முத்தமிழாகத் தோன்றிற்று. அவற்றுள் அடிப்படையான இயற்றமிழ் இலக் கணமும் மூவதிகாரப் பிண்டமாகவே தோன்றிற்று. இதனால் பொருளதிகார அகப்புறப் பொருட்பாகுபாட்டிற்கு மூலமான அறநூற் பொருட்பாகுபாடு, தலைக்கழகத்திற்கும் முந்தியதென அறிக. அது ஆரியம் என்னும் பேரும் இனமுந் தோன்றாத முதுபண்டைக் காலம். அகம் புறம் என்பதே தமிழர் பொருட்பாகுபாடென்பது, பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழில் என்பதே தமிழர் பெயர்ப்பாகுபாடென்பது போன்றதே.

4. திருவள்ளுவர் வரலாறு

பெயர்: இவர் பெயர் வள்ளுவன் என்பதே. வள்ளுவர் என்பது உயர்வுப் பன்மை. இவரது இறைப்பற்றொடு கூடிய ஒழுக்கத்தின் உயர்வும்