பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

திருக்குறள்

தமிழ் மரபுரை



"நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது" (235)

என்பது சொற்சுருக்க முள்ளது.

"தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை”, (உவமை)

“வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு”, (உவமை)

"உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்”, (உவமை)

"நெடுநீர் மறவி மடிதுயில் நான்குங்
கெடுநீரார் காமக் கலன்", (உருவகம்)

"நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்" (பிறிதுமொழிதல்)

"தீயினாற் சுட்டபு ணுள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு” (வேற்றுமை)

"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்”, (வஞ்சப் புகழ்ச்சி)

"கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்", (முரண்)

"நெருந லுளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு” (எதிர்ப்பொருள்)

“காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாந் தான்கண்ட வாறு" (சொற்பொருட் பின்வருநிலை)

என்பன பல்வேறு அணியுடையன.

9. திருக்குறள் நூல்வகை

கடைக்கழகச் செய்யுள்கள் அல்லது நூல்கள் என்று முதலில் வழங் கியவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமே. திருவள்ளுவர் கழகப்புலவ ரன்மையாலும், அவர் நூல் கழகத்திலுள்ள பிராமணப் புலவரால் ஒப்புக்-