பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - முதற்பகவன் வழுத்து

41


இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்; நிலமிசை நீடு வாழ் வார் - எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார்.

மலர் என்னுஞ் சொல் தனித்துநின்று மனத்தைக் குறியாமையாலும், ஏகினான் என்னுஞ் சொல்லாட்சியாலும், மலர்மிசை யேகினான் என்பது இயல்பாக இறைவன் பெயராதற்கு ஏற்காமையாலும் 'பூமேல் நடந்தான்' என்னும் அருகன் பெயரையே ஆசிரியர் இறைவனுக்குப் பொருந்துமாறு ஆண்டார் என்பது தெரிகின்றது. "மலர்மிசை நடந்தோன்" என்று இளங் கோவடிகளும் கவுந்தியடிகள் கூற்றாகக் கூறுதல் காண்க (சிலப். 10 : 204). சமணர் தம் பொய்யான சமயத்தை விட்டுவிட்டு மெய்யான கடவுளை வணங்க வேண்டுமென்பது இக் குறளின் உட்குறிப்பு.

அடியாரின் உள்ளத்தாமரை நோக்கி ஏகுவானை ஏகினான் என்று இறந்தகால வாய்பாட்டாற் கூறியது, விரைவுபற்றிய கால வழுவமைதி. அடிசேர்தல் - இடைவிடாது நினைத்து அதற்கேற்ப ஒழுகுதல்.

4. வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில.

(இ-ரை.) வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல - எங்கும் எக்காலத்தும் துன்பமில்லை.

விருப்பு வெறுப்பினாலேயே துன்பங்கள் வருவதனாலும், விருப்பு வெறுப்பில்லாத இறைவனை யடைந்தவரும் விருப்பு வெறுப்பற்றவராயிருப்பராதலாலும், இறைவன் இன்ப வடிவினனாகவும் எல்லாம் வல்லவனாகவு மிருப்பதனாலும், அவனடி யடைந்தார்க்கு எங்கும் என்றும் எவ்வகைத் துன்பமும் இல்லையென்பது.

5. இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
.

(இ-ரை.) இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இருவினையும் இல்லா தனவாகும்.

வழிதெரியாத இருள்போலிருத்தலின் அறியாமையை இருளென்றும், நல்வினையும் பிறவிக் கேதுவாமென்பது கொண்முடிபு (சித்தாந்தம்) ஆதலின்