உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தமிழ் இலக்கிய வரலாறு


 அரசஞ் சண்முகனார்

இவர் பாடியவை ஏகபாத நூற்றந்தாதிமாலை, மாலை மாற்று, இன்னிசை இருநூறு முதலியன. இவர் ஆய்வுகள் திருக்குறளாராய்ச்சி, தொல்காப்பியப் பாயிர விருத்தி முதலியன.

மயிலைச் சண்முகம் பிள்ளை

இவர் பாடியது திருமுல்லைவாயிற் புராணம்

சுன்னாகம் சு. குமாரசாமிப் புலவர்

இவர் தொகுத்தது தமிழ்ப்புலவர் சரித்திரம்.

நெல்லைப் பால்வண்ண முதலியார்

இவர் இயற்றியது சொற்பொழிவாற்றுப்படை என்னும் தனித்தமிழ் உரைநடை நூல்.

தஞ்சைச் சீநிவாசப் பிள்ளை

இவர் தமிழ் வரலாறு (2 பாகம்) தொகுத்துள்ளார்.

மாகறல் கார்த்திகேய முதலியார்

இவர் எழுதியது தமிழ்மொழி நூல். இதுவே முதன்முதல் தமிழில் எழுந்த மொழியாராய்ச்சி நூல்.

பாம்பன் குமரகுருதாச அடிகள்

இவர் பாடியன சேந்தன் செந்தமிழ் என்னும் 50 தனித் தமிழ் வெண்பாவும், குமாரசுவாமியம் என்னும் பெரும்பாவியமும் ஆகும்.

உ.வே.சாமிநாதையர் (1855-1942)

இவ்விருபதாம் நூற்றாண்டு மாபெரும் புலவர் ஒருசிலவருள் ஒருவரும், நூலாசிரியரும் நுவலாசிரியரும் உரையாசிரியரும், ஏட்டுச் சுவடித் தேட்டாளரும் ஆய்வாளரும் பதிப்பாளரும், தென் கலைச்செல்வர், பெரும்பேராசிரியர், பண்டாரகர் (Dr.) என்னும் பட்டங்கள் பெற்றவரும், தமிழுலகம் என்றும் நன்றியறிவோடு நினைவு கூரத்தக்கவரும் உ.வே. சாமிநாதையர் ஆவர்.

இவர் பதிப்பித்த ஏட்டுச்சுவடிகள்

பத்துப்பாட்டு, எட்டுத்தொகையுள் ஐந்து (ஐங்குறுநூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு), பெரும்