உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

5


பாவியம் நான்கு (சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெருங்கதை), சிறுபாவியம் ஒன்று (உதயண குமார காவியம்), இலக்கணவுரை நான்கு (மயிலை நாதருரை, சங்கரநமச்சிவாயருரை, தமிழ்நெறிவிளக்கம், புறப்பொருள் வெண்பா மாலையுரை), புராணம் 13, கோவை 7, மும்மணிக் கோவை 2, உலா 10, அந்தாதி 3, கலம்பகம் 1, பிள்ளைத்தமிழ் 1, மாலை 2, பரணி 2, தூது 6, குறவஞ்சி 2, வெண்பாப்பனுவல் 3. பனுவற்றிரட்டு 4 முதலியன.

இவர் எழுதிவெளியிட்ட உரைநடைப் பொத்தகங்கள்

மான்மியம் 1, மதவியல் 1, கதைச்சுருக்கம் 2. வாழ்க்கை வரலாறு 6, இலக்கிய வரலாறு 1, கட்டுரைத்திரட்டு 9 முதலியன.

உரைநடைப் பொத்தகங்களுள், ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (3 பாகம்), சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும் தலைசிறந்தவை.

சிறுமணவூர் முனிசாமி முதலியார்

இவர் பிரபஞ்சோற்பத்தி, நாரதர் கலகம், வைத்திய ரத்தினா கரம், மூலிகை மருமம், அனுபவ வைத்தியம், சோதிடவிளக்க சிந்தாமணி முதலியன எழுதி வெளியிட்டார்.

விருதை சிவஞான யோகிகள்

இவர் ஆராய்ச்சியாலும் நூலாலும் தமிழின் தனி மாண்பை நாட்டினார்.

கா. நமச்சிவாய முதலியார்

இவர் அக்காலப் பள்ளிக் கல்விப் பல்வகுப்புத் தமிழ்ப் பாடப் பொத்தக ஆசிரியர்; தமிழ்ப்புலவர் தேர்விற்குப் பாடமாக வைக்கப் பட்டிருந்த சமற்கிருதப் பகுதியை நீக்க ஏற்பாடு செய்தவர்.

க.ப. மகிழ்நன்

இவர் சந்தோஷம் என்னும் தம் வடசொற்பெயரை மகிழ்நன் என்று தனித் தமிழாக மாற்றி, நகைச்சுவையாகவும் தமிழ்நலமாகவும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் சில பாடப்பொத்தகங்களும் எழுதியவர்.

துடிசைகிழார் அ. சிதம்பரனார்

இவர் உருத்திராக்க விளக்கம், துடியலூர்ப் புராணம், தமிழ்ச் சங்கங்களின் வரலாறு, சேரர் வரலாறு முதலியவற்றின் ஆசிரியர்;