உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

தமிழ் இலக்கிய வரலாறு


திருமந்திர ஆராய்ச்சியால் திருமந்திரமணி எனப் பெயர்பெற்ற துடிப்புமிக்க தமிழறிஞர்.

இராமநாத பிள்ளை

குலசேகரம் பட்டினத்தைச் சேர்ந்த இராமநாதபிள்ளை தனித் தமிழிலேயே பேசுவதும் எழுதுவதும் கடமையாகக் கொண்டவர். சைவசமய உணர்ச்சிக்காக நாம் செய்ய வேண்டிய வேலை யாது? சிவ சின்னங்கள் அணிவதேன்? என்பன இவர் எழுதியவை.

திரு.வி.கலியாண சுந்தர முதலியார்

இவர் இதழாசிரியராகவும் நூலாசிரியராகவும் சொற் பொழிவாளராகவும் சீர்திருத்தத் தலைவராகவும் சிறந்த பொதுநலத் தொண்டாற்றியவர். இவர் எழுதியவை என் கடன் பணிசெய்து கிடப்பதே, காந்தியடிகளும் மனிதவாழ்க்கையும், பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, சைவத் திறவு, சைவத்தின் சமரசம், கடவுட் காட்சியும் தாயுமானவரும், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நூல்களில் பெளத்தம், தமிழ்த் தென்றல், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், நாயன்மார், பெரியபுராணக் குறிப்புகள் முதலியன. முதலில் வெசிலிக் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராக இருந்தவர்.

கா. சுப்பிரமணியப் பிள்ளை

தமிழ் ஆங்கிலம் சமற்கிருதம் ஆகிய மும்மொழி முதுகலைப் பட்டம் பெற்றவரும் தாகூர்ச் சட்ட விரிவுரையாளருமான கா. சுப்பிரமணியப் பிள்ளை, தனித்தமிழ்க் காப்பாளருள் ஒருவர். இவர் எழுதியவை தமிழ்மொழியமைப்பும் மொழிநூற் கொள்கையும், தமிழ் இலக்கிய வரலாறு (2 பாகம்) முதலியன.

பூரணலிங்கம் பிள்ளை

ஆங்கிலப் பேராசிரியரும் ‘ஞானபோதினி” இதழாசிரியருமான முந்நீர்ப்பள்ளம் பூரணலிங்கம் பிள்ளை, சிறந்த தமிழ்ப் பற்றாளரும் நடுநிலை யாராய்ச்சியாளரு மாவர். இவர் எழுதியவை தமிழ் இந்தியா, நபிநாயகமும் கவிவாணர்களும் முதலியன.

பா.வே.மாணிக்க நாய்க்கர்

சென்னை அரசியற் பொதுப்பணித் துறையில், வினையாட்சிச் சூழ்ச்சியகராய் (Executive Engineer) இருந்த பா.வே.மாணிக்க நாய்க்கர்