உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

தமிழ் இலக்கிய வரலாறு


ரா. இராகவையங்கார்

இவர் சேதுநாட்டு அரண்மனைப் புலவர். இவர் எழுதியவை சேதுநாடுந் தமிழும், வஞ்சிமாநகர், நல்லிசைப் புலமை மெல்லிய லார், தமிழ் வரலாறு; பாடியது பாரி காதை (வெண்பா யாப்பு).

மு. இராகவையங்கார்

இவர் ரா. இராகவையங்காரின் அளியர் (மைத்துனர்). இவர் எழுதியவை தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, வேளிர் வரலாறு, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, சாசனத் தமிழ்க்கவி சரிதம், தமிழரும் ஆந்திரரும், சேரவேந்தர் தாய வழக்கு, ஆராய்ச்சித் தொகுதி (கட்டுரைகள்); தொகுத்தது பெருந்தொகை (தனிப்பாடற் றிரட்டு).

சென்னைப் பல்கலைக்தகழகத் தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் குழுவில், தலைமையாயிருந்தவர் இவரே. மதுரைக் கோபாலகிருட்டிணக் கோனார்

இவர் 1956-ல் மதுரைத் தமிழ்ப் பேரகராதியை வெளி யிட்டார்.

சதாசிவ பண்டாரத்தார்

இவர் தமிழ்ப்புலவர்க்குள் தலைசிறந்த கல்வெட்டாராய்ச்சியாளர்; அண்ணமாலை பல்கலைக் கழகத்திற் கல்வெட்டாராய்ச்சித் தலைவராய்ப் பணியாற்றியவர். இவர் எழுதியவை முதற் குலோத்துங்கச் சோழன், பாண்டியர் வரலாறு, இலக்கியமுங் கல்வெட்டுகளும் முதலியன.

கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார்

இவர் எழுதியது பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் (2 பாகம்).

சேதுப்பிள்ளை

இவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரா யிருந்தவர். இவர் எழுதியவை திருவள்ளுவர் நூல்நயம், கங்கை வேடனும் காளத்தி வேடனும், வில்லும் வேலும், கால்டுவெல் ஐயர், ஊரும் பேரும், கிருத்தவத் தமிழ்த் தொண்டர் முதலியன.

புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார் (1891-1964)

இந்தியாவில் ஆங்கிலராட்சி நீக்கத்திற்குப் பாடியவர் சுப்பிர மணிய பாரதியார்; தமிழகத்தில் ஆரியராட்சி நீக்கத்திற்குப் பாடி யவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார்.