உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இக்காலம்

9


கட்டுரை

சிந்தனைக் (ஓர்வுக்) கட்டுரைகள், இளைஞர்க்கான இன்றமிழ், சிறுவர்க்கான செந்தமிழ், உரைமணிக் கோவை, அறிவுரைக் கொத்து. நாடகம்: அம்பிகாபதி அமராவதி.

பேரா.வி.இரா. இராமச்சந்திர தீட்சிதர்

இவர் மூன்றாங் குலோத்துங்கச் சோழன் வரலாற்றை ஆய்ந்தெழுதி 1943-ல் வெளியிட்டார்.

வரகுண பாண்டியனார்

இவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் இளைய மகனார்; 1950-ல் பாணர்கைவழி என்னும் அரிய ஈடிணையற்ற மறுக்கொணா யாழாராய்ச்சி நூலை வெளியிட்டார்.

அ. இராமசாமிக் கவுண்டர் (1899-1950)

சேலம் நகராட்சிக் கல்லூரி முதல்வர் அ. இராமசாமிக் கவுண்டர், திருக்குறள் புத்துரை, பகவற்கீதைச் சுருக்கம் (மொழி பெயர்ப்பு), நெல்சன் (வரலாறு), நெப்போலியன் (வரலாறு) முதலிய வற்றின் ஆசிரியர்; தலைசிறந்த தமிழ்க் காவலர்.

என்னைச் சேலங் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியனாக அமர்த்தியவரும், என் மொழியாராய்ச்சி முற்றுவதற்குத் தோதா யிருந்தவரும், இவரே.

வரதநஞ்சையப் பிள்ளை

சலகண்டபுரம் கணக்குப் பிள்ளையாயிருந்த வரத நஞ்சையப் பிள்ளை ஒரு பெரும்புலவர்; சிறந்த சொற்பொழிவாளர். இவர் இயற்றியது தமிழரசி குறவஞ்சி.

பண்டிதமணி கதிரேசச் செட்டியார் (1881-1953)

தன்முயற்சியாலும் தாளாண்மையாலும் தென்மொழியிற் போன்றே வடமொழியிலும் தேர்ச்சிபெற்று, பண்டிதமணியென் னும் பட்டத்தொடு உ.வே. சாமிநாதையர்க்கொப்பப் பெரும் பேராசிரியர் பட்டமும் பெற்றுச் செருக்கின்றி வாழ்ந்த பெருந் தகையார் மகிபாலன் பட்டிக் கதிரேச் செட்டியார்.

இவர் படைப்புகள் உரைநடைக் கோவை, மேலைச்சிவபுரி விநாயகர் பதிற்றுப்பத்து, கௌடிலீயம், சுக்கிரநீதி, மண்ணியல் சிறுதேர்(மிருச்சகடிகம்) முதலியன. இறுதி மூன்றும் வட மொதழியினின்று மொழிபெயர்த்தவை.