உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

தமிழ் இலக்கிய வரலாறு


"செழிப்போரே இளைஞர்களே தென்னாட்டுச் சிங்கங்காள் எழுக நம்தாய்

மொழிப்போரே வேண்டுவது தொடக்கஞ்செய் வீர்வெல்வீர் மொழிப்போர் வெல்க.

என்று பாடி, ஆரிய அடிமைத்தனத்தினின்றும், இந்தித் தாக்குத லினின்றும் விடுதலைபெற மொழிப்போர் தொடுக்குமாறு, புரட்சிப் பாவேந்தர் தமிழ இளங்காளையரை ஏவினார்.

இவர் படைப்புகளாவன:

1.பனுவல்கள்

குடும்ப விளக்கு, தமிழியக்கம், குயில், அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், இருண்ட வீடு, இசையமுது, ஏற்றப்பாட்டு, காதல் நினைவுகள், காதலா கடமையா, தமிழச்சியின் கத்தி, இளைஞர் இலக்கியம், தேனருவி, மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம்.

2.நாடகங்கள்

இரணியன், படித்த பெண்கள், சேரதாண்டவம், நல்லதீர்ப்பு, கழைக்கூத்தியின் காதல், கற்கண்டு, செளமியன், அமைதி.

பர் (Dr.) மு. வரதராசனார்

மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராய்ப் பணி யாற்றி வரும் பர். மு. வரதராசனார் எழுதியவை படியாதவர் படும்பாடு, தமிழ்நெஞ்சம், கண்ணுடைய வாழ்வு, கள்ளோ காவியமோ, மொழிநூல், மொழிவரலாறு, அன்னைக்கு முதலிய 40 உரைநடை நூல்கள்.

பர். (Dr.) இலக்குவனார்

இவர் நாகர்கோவில் இந்துக்கல்லூரி முதல்வராயிருந்தவர்: கட்டாய இந்தியை எதிர்த்துச் சிறை சென்றவர். இவர் எழுதியவை தொல்காப்பிய ஆராய்ச்சி, இலக்கணக் கட்டுரைகள், திருக்குறள் பொழிப்புரை முதலியன. மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேய்ந்தர் பதவிக்கு முழுத்தகுதி இவர்க்கிருந்தும், அதைப் பெறாது போனது வருந்தத் தக்கது.

மருத்துவ கணியப் புலவர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை

தமிழ்ப் பெரும்புலவரும் பெற்றிய (சித்த) மருத்துவரும் பெருங்கணியரும் தலைசிறந்த தமிழ்க்காவலருமான இ.மு. சுப்பிர