உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இக்காலம்

13



மணியப்பிள்ளை, சென்னை மாநிலத் தமிழ்ச் சங்கந் தோற்றுவித்தும், அதன் சார்பாகத் தமிழ்த்தாய் என்னும் காலாண்டிதழ் ஆசிரியரா யிருந்தும், கலைச்சொல்லாக்க மாநாடுகள் நடத்திக் ‘கலைச் சொற்கள்' என்னும் சொற்றொகுப் பும் ஆட்சிச்சொல் மாநாடுகள் நடத்தி ஆட்சிச்சொல் அகர வரிசையும் தொகுப்பித்தும், உலகப் பொதுமறை திருக்குறள் ஒழுக்க முறை, உலகப் பொதுச்சமயம், தம்பிரான் றோழர், நெல்லை மாவட்டக் கோவில் வரலாறு, இராமாயண ஆராய்ச்சி, திருமுருகாற்றுப்படை விளக்கவுரை, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாறு (5 பகுதிகள்) முதலியன எழுதி வெளியிட்டும், தமிழ் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் வாழ்நாள் முழுதும் அல்லும் பகலும் அரும்பாடுபட்டுவருபவர்.

சிவனிய ஐந்திறம் (சைவப் பஞ்சாங்கம்) 5 ஆண்டு செவ்வையாகக் கணித்து, இடையறாது வெளியிட்டும் வெளியிடு வித்தும் வருவது, இவரது கணியப் புலமையையுந் தொண்டையும் புலப்படுத்தும்.

சென்றவிடமெல்லாஞ் செந்தமிழ்த் தொண்டாற்றிய இவர்க்கு, அரசினர் சிறப்போ பொதுமக்கள் பாராட்டோ ஒரு சிறிதும் இல்லாதிருப்பது, இற்றைத்தமிழின் நிலைமையையும் தமிழர் இயல்பையுந் தெளிவாகக் காட்டும்.

புருடோத்தம நாயுடு

கண்ணுழையாக் காரிருட் கடுங்கானத்துள் கதிரவன் தோன்றினாற் போன்று, வடமொழிப் புலமையில்லார்க்குப் பயன்படாத ஈடு என்னும் திருவாய்மொழி மணிப்பவள வுரைக்கு விளக்கஞ் செய்த இவர் உதவி, ஈடிணையற்றது.

கவியோகி (பாவர சோகியார்) சுத்தானந்த பாரதியார்

தமிழ், இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமானியம் ஆகிய அறுமொழிப் புலவரும், ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா ஆகிய முக்கண்டமும் தமிழ்மறையைப் பரப்பியவரும், திருவருட்பா, ஆழ்வார் தெய்வப் பனுவல் ஆகியவற்றை இந்தியிலும், திருக்குறள், திருவாசகம், தாயுமானவர் பாடல் முதலியவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வெளிநாடுகள் அறியச் செய்தவரும், திருக்குறட்கும் திருமந்திரத்திற்கும் தமிழில் தெளிவுரை வரைந்தவரும்,

"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி. (குறள். 118)

என்னுந் திருக்குறட்கு இலக்கியமானவரும், ஓகப் பயிற்சியில் உயர்ந்தவரும் பிராமணர் என்னுங் கருத்தால் தமிழராலும் தமிழ்ப்