உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழ் இலக்கிய வரலாறு




உரு - அரு - அரும்பு = மொட்டு. அரும்புதல் தோன்றுதல். அரும்பு - அருப்பு - அருப்பம் = தோன்றும் இளமீசை.

குரு

குருத்தல் = தோன்றுதல். குரு = சிறு கொப்புளம் (வேர்க்குரு), கொட்டை. குரு - குருகு = குருத்து, இளமை, குட்டி. குருகு - குருக்கு = இளம் பனந்தோப்பு. குரு குருத்து = தாள், தோகை, ஓலை முதலிய வற்றின் இளங்கொழுந்து. குருத்து - குருந்து = வெண்குருத்து, குழந்தை. குரு - குருப்பு = தோன்றிய பரு. குருப்பு-குரும்பு-குரும்பை தென்னை பனை யிளம் பிஞ்சு, குருமா-குருமான்-குருமன் = விலங்குக்குட்டி. குரு - குருள் - குருளை = குட்டி.

குரு(= பரு.)-ம., க., தெ, குரு, குருப்பு.

குரு-கரு = சூல் (கருப்பம்), முட்டைக்கரு, முட்டை, பிறப்பு, குழந்தை, குட்டி, உடம்பு, நிலத்தில் தோன்றும் பொருள்.

ம.கரு. கரு-கருத்து=மரக்கன்று.

சுரு (வழக்கற்றது)

துரு

துருத்தல் = தோன்றுதல். துரு-துருத்து. துருத்துதல் = தோன்றச் செய்தல், கொட்டை காற்று முதலியவற்றை முன்தள்ளுதல். துருத்து- துருத்தி.

நுரு

நுருத்தல் = தோன்றுதல். நுரு = அறுத்த தாளில் முளைக்குந் தளிர். நுரு-நொரு = முதிர்ந்த பயிரின் அடியில் முளைக்குந் தளிர், காய்ப்பு ஓய்ந்தபின் தோன்றும் பிஞ்சு. நொருப்பிஞ்சு, நொருப்பிடித்தல் என்பன உலகவழக்கு.

புரு


புருத்தல் = தோன்றுதல் (வழக்கற்றது). புரு = குழந்தை

புரு-வ. புரூண (bhrna)

முரு

முருத்தல் = தோன்றுதல் (வழக்கற்றது).

முரு - முருகு = இளமை, இளமை யழகு, இளமையான முருகன்.

முருகு-முருகன் = இளைஞனான குறிஞ்சித் தெய்வம்.

முரு-முறு = முறி. முறிதல் = தளிர்த்தல். முறி = தளிர், கொழுந்து. முறி-மறி = குட்டி