94
வடமொழி வரலாறு
உவமை. உவ - உவகை. உவமை =ஒப்பு (திவா.)
மகிழ்ச்சிக்கு விருப்பமும் விருப்பத்திற்கு மனப்பொருத்தமுங்
காரணமாம்.
நாட, விழைய, வீழ என்னும் உவமவுருபுகள் விருப்பக் கருத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. உவமை என்னுஞ் சொல் விருப்பப் பொருளை உணர்த்துவது மட்டுமன்றி, ஒப்புமைப் பொருளை இயல்பாகக் கொண்டும் உள்ளது.
உவமை - உவமம் - உவமன்
ஒ.நோ: பருமை பருமம் - பருமன்
T
முழுமை - முழுமம் - முழுமன் - முழுவன் உவமை - உவமி. ஒ.நோ : ஒருமை ஒருமி.
உவமித்தல் = ஒப்பாக்குதல், ஒப்பாகக் கொள்ளுதல், ஒப்பிடுதல். தொல்காப்பியத்தில் ஆளப்பெற்ற வடிவம் உவமம் என்பதே.
உவமை என்னுஞ் சொல் வடமொழியில் உபமா என்று திரியும். அதை உப + மா என்று பிரித்து இருசொற் கூட்டாக்கி, ஒத்த அளவு என்று பொருள் கூறுவர். உப = உடன். மா = அளவு. தமிழில் உவமை என்பது, உவ என்னும் முதனிலையும் மை என்னும் ஈறுங்கொண்ட ஒரு சொல்லே.
இருக்கு வேதத்தில், உபமா என்பது கூட்டுச்சொல்லா யிருந்து முன்சொல்லிற் பொருள் சிறந்து அளத்தல், பங்கிடுதல், அளித்தல் என்று பொருள்பட்டதாகத் தெரிகின்றது. சதபத பிராமணம், மகாபாரதம் முதலிய பின்னூல்களில், அது தமிழ்த்தொடர்பினால் ஒப்புமைப் பொருள் பெற்றுவிட்டது.
ஒப்பு, ஒப்புப்பொருள் என இருகூறு கொண்டது உவமை என்னும் அணி. ஒப்பு உவமம் என்றும், ஒப்புப்பொருள் பொருள் என்றும் தமிழிற் சொல்லப்பெறும், வடமொழியார், பிற்காலத்தில் பிரமாண(ம் )-பிரமேய(ம்) என்னும் முறையில், உவமத்திற்கும் பொருளுக்கும் உபமான உபமேய என்னும் சொல்லிணையை ஆக்கிக்கொண்டனர். இதிலும், மான என்பது அளவுகுறித்த மானம்
என்னும் தென்சொல்லே.
-
உற்கம்
உல்க
வே.)
-
உல் - உலர். உல் - சுல் சுல்லி = அடுப்பு.
உல் - உள் - உண் - உண. உள் - உர்-உரும்-உரும்பு = கொதிப்பு,