96
வடமொழி வரலாறு
இங்ஙனமிருந்தும், சூசி என்பதினின்று ஊசி என்பது திரிந்துள்ளதாக, பிராமணத் தமிழ்ப்பண்டிதர் சென்னைப் ப. க. க. த, அகரமுதலியிற் காட்டியிருப்பது எத்துணை நெஞ்சழுத்தம்!
ஊதை வாதை (இ. வே.)
ஊள
ஊ - ஊது - ஊதை = 1. காற்று (திவா.) 2. வாடைக்காற்று, "பனிப்புலர் பாடி.... ஊதை யூர்தர" (பரிபா. 11: 84). 3. வளி(வாத) நோய்.
“தலைவலி பன்னமைச்ச லூதை” (தைலவ. தைல. 7).
வடமொழியார் வா (blow) என்பதை மூலமாகக் கொள்வர். அது
ஊ என்பதன் திரிபே.
ஊர்
―
ரோஹ் (இ.வே.)
உர்
-
உறு உறி = உயரத் தொங்கவிடும் தூக்கு.
உறு-உறை = உயரம் (பிங்.).
உர் ஊர். ஊர்தல்
-
= 1. ஏறுதல். "ஊர்பிழிபு....வந்தன்று"
(ஐங். 101). 2. ஏறிச்செல்லுதல்.
"சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான்"
""
(குறள்.37)
வடமொழியார் காட்டும் ருஹ் (to ascend) என்னும் மூலம் ஊர் என்பதின் முறைமாற்றுத் திரிபே (metathesis)
ஊர் - ஊர்த்தம். ஒ.நோ: நேர் - நேர்த்தம். ஊர்த்தம் - ஊர்த்வ (urdhva) உயர்ந்த, தூக்கிய (இ. வே.).
—
எருமை ஹெரம்ப
இர் இரு
மாட்டினம்.
எல்லரி
—
ருமை = கருமை. ருமை எருமை = கரிய
ம. எரும, து. எர்மெ, தெ. எனுமு, க, எம்மெ.
-
ஜல்லரீ (jh)
எல்லரி = பறைவகை. “வல்வா யெல்லரி" (மலைபடு. 10).
ஏது ஹேது
ஏ -ஏவு -ஏசு-ஏது.
ஏசுதல் - ஏவுதல், செலுத்துதல்.
"கொல்லம் பேசி"
ஏது = ஏவுகை. தூண்டுகை, காரணம்.
(தேவா.380:6)