124
வடமொழி வரலாறு
குந்தம் - குந்த (nt) = வேல், ஈட்டி
குந்து -குந்து - குந்தம் = 1.குத்துக்கோல்.
"பூந்தலைக் குந்தங் குத்தி" (முல்லைப். 41). 2. வேல் "குந்த மலியும் புரவியான்" (பு. வெ. 4 : 7).
3.எறிவேல் (javelin)
66
'வைவா ளிருஞ்சிலை குந்தம்" (சீவக. 1678).
குந்தாலம் - குத்தால (dd)
குந்தாலம் = குத்தித் தோண்டுங் கருவிவகை.
குந்தாலம் - குந்தாலி. “குந்தாலிக்கும் பாரை வலிது” (திருமந். 2909). ம. குந்தாலி.
குந்தாலம் - கூந்தாலம். குந்தாலி - கூந்தாலி.
குப்பாயம்
கூர்ப்பாஸ = கவசம், சட்டை.
குப்பி = குடுவை, மாட்டுக்கொம்புப் பூண். குப்பா = தூரிவலையிற் சேர்த்துள்ள பை.
குப்பாயம் = சட்டை.
'வெங்க ணோக்கிற் குப்பாய மிலேச்சனை' (சீவக. 431). குப்பாயம் -குப்பாசம் = 1. மெய்ச்சட்டை.
"குப்பாச மிட்டுக் குறுக்கே கவசமிட்டு" (தமிழ்நா. 192). 2. பாம்புச் சட்டை (சி. சி. பாயி. ப.42).
கும்பம் - கும்ப (bh) - இ.வே.
-
கும்முதல் = குவிதல். கும்குமி -குமிழ் குமிழி
கும் - கும்பு - கூம்பு. கூம்புதல் - குவிதல். கும்புதல் = குவிதல். கும்பு - கும்பம் குடம், தேர் முடி, யானைத் தலைக் குவவு, கட்டடக் குவிமுகடு (dome).
கும்பச்சுரை = குவிந்த சுரைக்காய்.
கும்பம் - கும்பா = கீழ்நோக்கிக் குவிந்த உண்கலம்.
கும்பு - கும்பிடு. கும்பிடுதல் = கைகுவித்தல்.
வடவர் காட்டும் கும்ப் (b, bh) என்னும் மூலம் கும்பு என்பதன் சிதைவே. ஆயின், அவர் கொள்ளும் பொருள் கவிதல்; தென்னவர் கொள்ளும் பொருள் குவிதல். முன்னது கீழ்நோக்கியதென்றும், பின்னது மேல்நோக்கியதென்றும் வேறுபாடறிக.