மொழியதிகாரம்
125
குமரன்
குமார (இ.வே.)
கும் கும்மல் = கும்பல், கூடுதல். கும்மலி = பருத்தவள்.
-
=
கும் - கொம் - கொம்மை = 1.பருமை. (பெருங். உஞ்சைக்.40:210). 2. திரட்சி (சூடா.). 3. இளமை (திவா.).
கும் - குமர் = 1. திரண்ட இளைஞை, கன்னி. 2. கன்னிமை. “குமரிருக்குஞ் சசிபோல்வாள்" (குற்றா. தல. தருமசாமி. 47). 3. அழியாமை. "குமருறப் பிணித்த” (பாரத. இந்திரப்.32). மணப்பருவத்தில் ஆணும் பெண்ணும் திரள்வது இயல்பு. ஒ.நோ : விடை - விடலை = இளைஞன். விடலி = இ ளைஞை. விடை = இள ஆண்விலங்கு, பறவையின் திரண்ட இ விடைத்தல் = பருத்தல்.
குமர்
-
=
=
-
குமரன் = இளைஞன், முருகன். குமர் குமரி ளைஞை. கன்னியாகக் கருதப்பெறும் காளி.
=
ஆ ரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, குமரிக் கண்டமாகிய பழம்பாண்டி நாட்டில் குமரி (காளி) பாலைநிலத் தெய்வமும் வெற்றித் தெய்வமும் குரு (அம்மை) நோய்த் தெய்வமுமா யிருந்தாள். அவள் பெயரால் ஒரு மலைத்தொடரும் ஒரு பேராறு மிருந்தன.
வடவர் குமர என்னும் வடிவைக் குமார என்று நீட்டி அதற்கு மகன்மைப் பொருள் சேர்த்ததுடன், கு+மார என்று சொற்சிதைத்து, எளிதாயிறப்பவன் (easily dying) என்று பொருந்தாப் பொருட் காரணமுங் காட்டுவாராயினர்.
இனி, உணாதி சூத்திரம் கம் (விரும்பு, காமி) என்பதை மூலமாகக் காட்டும்.
குமரன், குமரி என்னும் இரண்டும் தூய தென்சொற் களாதலின், மணமாகாத இளைஞன் பெயர்க்குமுன் குமரன் (Master) என்றும்,மணமாகாத பெண்ணின் பெயர்க்குமுன் குமரி (Miss) என்றுமே, அடை கொடுத்தல் வேண்டும். செல்வன், செல்வி என்பன மணமக்கள் பெயர்க்கே பொருத்தமானவை.
மகன், மகள் என்று முறையே பொருள்தரும் குமார(ன்), குமாரீ என்னும் வடிவுகளே வடசொற்கள்.
கிழப்பருவத்திலு
எளிதாயிறப்பது குழவிப்பருவத்திலும் மாதலின். கட்டிளங்காளைப் பருவத்தைக் குறிக்குஞ் சொற்கு அப் பொருட் காரணம் பொருந்தாது. காமுறுவதும் காளைப்பருவமே. ஆயின், கும் என்னும் சொற்கும் கம் என்னுஞ் சொற்கும் தொடர்பில்லை. கம் என்பது காம் என்பதன் குறுக்கம்.