126
வடமொழி வரலாறு
கு + மார என்னும் தவற்றுப் பிரிப்புச் சொற்களும் தென்சொற் றிரிபே. குள் - கு. மடி - மரி - ம்ரு மார.
குமுதம் - குமுத (அ.வே.)
கும்முதல்
=
குவிதல்.கும் - குமுதம் = கதிரவனைக் கண்டு
குவிவதாகச் சொல்லப்படும் நீர்ப்பூ.
கு + முத என்று பகுத்து, ‘என்ன மகிழ்ச்சியுறுத்துவது' (exciting what joy') என்று வடவர் பொருட் காரணங் காட்டுவது, எத்துணை வியப்பானது!
கு என்பது குதஸ் (எங்கிருந்து), குத்ர (எங்கு), குவித், குஹ என்னும் வடமொழி வினாச் சொற்களின் அடியாகக் கொள்ளப் பட்டுள்ளது. முத் (வ.) = மகிழ்ச்சி.
குயில் கோகில
―
கூ (கூவு) -(கூயில்) - குயில். ம. குயில், க. குகில், தெ. குக்கில், மரா. கோயீல, வ. கோகில.
குரு1-குருத் (dh) - இ.வே.
உருத்தல் = பெருஞ்சினங் கொள்ளுதல். உரு - குரு. குருத்தல்
சினத்தல்.
குரு = வெப்பக் கொப்புளம்.
குரு க்ரு (gh) = எரி, ஒளிர். 2-
குரு = ஒளி. “குருமணித் தாலி" (தொல். 303, உரை).
"குருவுங் கெழுவும் நிறனா கும்மே '
குரு - குரு (g)
குரு = 1. பருமன். 2. பெருமை.
""
"குருமை யெய்திய குணநிலை" (சீவக.2748). 3. கனம். "பசுமட் குரூஉத்திரள் போல" (புறம். 32).
4. தந்தை. 5. ஆசிரியன். 6. குரவன், அரசன்.
(தொல்.303)
=
குருக்கள் = பிராமணரல்லாத மரவூண் வேளாளக் குரவர். குரு = குருசில் = தலைவன். "போர்மிகு குருசில்" (பதிற். 31 : 36). குருசில் - குரிசில் = தலைவன். (திருமுருகு. 276).
குரு குரவன். இருமுது குரவர்
=
பெற்றோர். ஐங்குரவர்
=
தந்தை, தாய், தமையன், ஆசிரியன், அரசன் ஆகியோர்.
குரவன் - குரவஹ்(g)
குரு - குரை = பெருமை.