130
வடமொழி வரலாறு
குடிகள் ஆடுகளும் அரசன் மேய்ப்பனும்போலக் கருதப் பெற்றதினால், அரசன் கோவன் எனப் பெற்றான். அரசன் செங்கோல் ஆயன் கைக்கோலுக் கொப்பாம்.
கோவன்-கோன் = 1. இடையன். 2. அரசன்.
கோன்-கோனார் = இடையர். கோன் - கோ = அரசன்.
கோவன் என்பதைக் கோப என்று திரித்தும் பின்பு அதைக் கோ+ப என்று பிரித்தும், கோவைப் பாதுகாப்பவன் என்று வடவர் பொருள் கூறுவது பொருந்தாது. கோவன் என்பது ஆயன் (ஆ+அன்) என்பதை யொத்ததே.
என்று
ஆங்கிலத்தில் (தியூத்தானியத்தில்) கோ (OS), கூ (OE), கௌ (E) எடுப்பொலியின்றியே வழங்கி வருகின்றது. வேத ஆரியத்தில்தான் go என்று எடுத்தும் gous என்று திரிந்தும் ஒலித்திருக் கின்றது.
கோசம் கோச = உருண்டை.
கோளம் - கோசம் = முட்டை (பிங்.)
கோட்டம்
ள -ச, போலி ஒ.நோ: உளு உசு, இளி
—
கோஷ்ட
-
சி.
கோடுதல் = வளைதல். கோடு - கோட்டம் = 1.வளைவு. 2.நிலா வைத் சூழ்ந்த வட்டக்கோடு. 3.மதிலாற் சூழப்பெற்ற கோயில். "கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்" (சிலப். 14:10). 4.மதிலாற் சூழப்பெற்ற சிறைச்சாலை.
"சிறைக்கோட்டம் விருப்பொடும் புகுந்து'
கோட்டி - கோஷ்டீ (g)
(LD600CLD. 19:43)
குலவுதல் கூடுதல். குள் - கள் களம். குழம்புதல் = கலத்தல், திரளுதல்.
குல் - குள் - கொள். கொள்ளுதல் = 1. பொருந்துதல், கூடுதல், மனத்திற்குப் பொருந்துதல்.
"
"கொள்ளாத கொள்ளா துலகு" (குறள். 470). 2.ஒத்தல். "வண்டினம் யாழ்கொண்ட கொளை" (பரிபா. 11: 125).
கொள் - கோள்
=
குலை. “செழுங்கோள் வாழை” (புறம்.168).
கொள் - கொள்ளை = 1. மிகுதி.
"கொள்ளை மதத்த நால்வாய்" (பாகவ. 1: 5: 14). 2. கூட்டம்.