உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

19


நடனம்-நடன ( t)

நடி-நடிகன், நடிகை.

நடிகன்-நடிக (t), நடிகை-நடிகா (t)

நட்டம்-நட்டணம், நட்டணை.

நட்டணம் - நர்த்தன

நாகம்-நாக (g)

நகர்-நாகம் = பாம்பு. நகர்தல் = ஊர்ந்து செல்லுதல்.

ஒ.நோ: E.snake, F. snicam, to creep.


வடவர் நக (மலை) என்னுஞ் சொல்லைக் காட்டி, மலையி லுள்ள தென்று பொருட்காரணங் கூறுவர்.

நாகரிகம்-நாகரிக

நகரம்-நகரம்-நாகரிகம்.

நாடகம்-நாடக (t )

நடி+அகம் = நாடகம்.

நாளம்-நால

நுள்-நள் -நாள் - நாளம் = உட்டுளையுள்ள தண்டு.

நாணல் -நாட

நாளம் - நாணம்-நாணல்

=

உட்டுளையுள்ள தட்டை.

நாடி-நாடி

நாள்-நாளி-நாழி-நாடி = அரத்த அல்லது மூச்சுக்குழாய், ஊதை (வாத) பித்துக் கோழை நாடி, நாடித்துடிப்பு.

நாலா-நானா

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால் வகுப்பையும் சேர்ந்த எல்லா மக்களும் வந்திருந்தனர் என்பதை, நாலா பேரும் வந்திருந்தனர் என்றும்; நாற்றிசையிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர் என்பதை, நாலா திசையிலுமிருந்து மக்கள் வந்திருந்தனர் என்றும்; கூறுவது மரபு.

நாலா = நால்வகை, எல்லா, பலவகை.