20
வடமொழி வரலாறு
நாவாய்-நௌ, நாவ (இ.வே.)
"நளியிரு முந்நீர் நாவா யோட்டி'
(புறம். 66)
நாவுதல்=கொழித்தல். நாவு-நாவாய்=கடல்நீரைக் கொழித்துச்
செல்லும் பெருங்கலம்.
"வானியைந்த விருமுந்நீர்ப்
பேஎநிலைஇய விரும்பௌவத்துக்
கொடும்புணரி விலங்குபோழக்
கடுங்காலொடு கரைசேர
நெடுங்கொடிமிசை யிதையெடுத் தின்னிசைய முரசுமுழங்கப்
பொன்மலிந்த விழுப்பண்ட மாடியற் பெருநாவாய்
நாடார நன்கிழிதரு
மழைமுற்றிய மலைபுரையத்
துறைமுற்றிய துளங்கிருக்கைத் தெண்கடற் குண்டகழிச்
சீர்சான்ற வுயர்நெல்லி
னூர்கொண்ட வுயர்கொற்றவ"
(மதுரைக்.75-88)
என்று, தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்மீது, அவன் முன்னோருள் ஒருவன் சாலி (சாவக)த் தீவைக் கைப்பற்றியமை ஏற்றிக் கூறப்பட்டிருத்தல் காண்க.
வேத ஆரியர் கடலையும் கப்பலையும் கண்டறியாது நில வழியாக இந்தியாவிற்கு வந்தவர். சிந்தாற்றில் இயங்கிய படகு களைப்பற்றித்தான் அவர்க்குத் தெரியும். அதனால் வடநாட்டில் வழங்கிய நௌ என்னும் சொல்லாற் படகையே முதலிற் குறித்தனர். வடவர் காட்டும் வேடிக்கையான சொன்மூலம் வருமாறு:
(1) நௌ=வாச் (c)-நிருக்த, 1: 11).
வாச் = பேச்சு, மொழி, குரல், ஒலி.
(2) நு = பராவு (praise).
தெய்வத்தைப் பராவும் மன்றாட்டு (prayer) வானுலகிற்குச் செலுத்துகின்ற கலமாக இருக்கின்றது.
"2. nau = vae, Nir.i, 11 (either because prayer is a vessel leading to heaven or
fr. 4.nu, 'to praise')"-மா. வி. அ. ப. 571.