50
வடமொழி வரலாறு
2. அளந்தறியும் அறிவுக் கரணம்.
"மதிநுட்பம் நூலோ டுடையார்க்கு
"9
3. பகுத்தறிவு."மதியிலி மடநெஞ்சே" (திருவாச. 5: 33).
4. அறிவு.
"மதிமை சாலா மருட்கை நான்கே
""
(குறள்.636)
(தொல்.பொருள்.255)
வடவர் மன் (கருது) என்னும் சொல்லினின்று மதம், மதி என்னும் சொற்களைத் திரிப்பர். மன் என்பது வேறுவழிச் சொல்லாயிருப்பதோடு தூய தமிழ்ச்சொல் என்பது, பின்னர் விளக்கப்பெறும்.
மத்தம்-மத்த (இ.வே.)
மதம்-மத (இ.வே.)
மது-மது (dh) - இ.வே.,
முத்துதல் = பொருந்துதல், சேர்தல், கலத்தல்.
முத்து-மத்து-மத்தம் = கலக்கம், மயக்கம்.
"மத்தமாம் பிணிநோய்க்கு"
ஒ.நோ: கல-கலும்-கலுழி
கலக்கம்.
(தேவா. 426:3)
கலக்கம். கல-கலங்கு-கலக்கு-
முயங்குதல் = தழுவுதல், கூடுதல், கலத்தல்.
முயங்கு-மயங்கு-மயக்கு-மயக்கம் = கலப்பு, கலக்கம்.
முய-முயல் -மயல்-மால் = மயக்கம்.
வெறுத்தல் = செறிதல், கலத்தல். வெறு-வெறி = கலக்கம்,
மயக்கம்.
=
கலத்தற் கருத்தினின்று கலக்கக் கருத்துத் தோன்றுதல் காண்க. மத்து பித்தியம் (பைத்தியம்) உண்டாக்கும் சாற்றுச் செடி (ஊமத்தை), "நன்மத்தை நாகத்தயல் சூடிய நம்ப னேபோல் (கம்பரா. உருக்கா. 81).
மத்து-மத்தம் (ஊமத்தை).
"மத்தநன் மாமலரும் மதியும் வளர்"
(தேவா. 923:8)
மத்தம் என்னுந் தென்சொல்லையே உன்னென்னும் முன்
னொட்டுச் சேர்த்து வடசொல்லாக்கினர்.
மத்து-மத்தை (ஊமத்தை)-(மலை.)
மத்தம்-வ. உன்மத்த-ஊமத்தம், ஊமத்தை.
மத்தம் = மயக்கந்தரும் கடாம். மத்தமா = யானை.