உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

51


மத்தம்-மதம். மதமா = யானை.

மதம் மதர். மதர்த்தல் = 1. செருக்குதல். 2. களித்தல்.


"துப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கும்" (கம்பரா. நாட்டுப். 24). 3. மதங்கொள்ளுதல். "மதர்விடையிற் சீறி" (பு. வெ. 7: 14).

மதர் மதர்வை = செருக்கு, களிப்பு, மயக்கம்.

மதம் மதன் = 1. செருக்கு.

-

"மதனுடை நோன்றாள்" (பட்டினப். 278).

2. மடமை. 3. கலக்கம்.

மதம் = 1. யானைக்கடாம். "மதயானை"(சீவக. 2485).

2. மதுவெறி (மலைபடு. 173, உரை).

3. தேன். "மதங்கமழ் கோதை" (சீவக. 2584).

4. காம மிகை. 5. வெறி. 6. செருக்கு.

"போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தப" (பரிபா.18:1)

மதம்-மத. மதத்தல் = மயங்குதல், கள்ளுண்டு களித்தல், காமம் மிகுதல், மதங்கொள்ளுதல், செருக்குதல்.

மத-மதக்கம் = மயக்கம். மதமதப்பு = திமிர், செருக்கு. மத்து-மது = 1. கள். "மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல" (தொல். பொருள். 114, உரை).

2. தேன். "மதுவின் குடங்களும்" (சிலப். 25: 38). மத்து-மட்டு 1. கள். “வெப்புடைய மட்டுண்டு"(புறம். 24). 2. தேன். “மட்டுவா யவிழ்ந்த தண்டார்"(சீவக. 1145). 3. இன்சாறு. "கருப்புமட்டு வாய்மடுத்து" (திருவாச.5:80) 4.காமக்குடிப்பு "மட்டுடை மணமகள்" (சீவக. 98).

5. கட்சாடி. "மட்டுவாய் திறப்பவும்" (புறம். 113).

"மட்டுவார் குழலம்மை" என்பது மலைமகள் பெயர்களுள் ஒன்று. மதம் - OE. gemad, E. mad.

மது - Gk. methu, AS. medu, ME. mede, OE. meodu, E. mead, OHG. metu, MLG. mede, ON. mjqthr, L. mel, G. meth, Russ. med, W. medd, Lith.middus, Sw. mjod, Dan. miod, Ice. mjodr, D. mede.

மது என்னுஞ் சொல் தமிழில் அருகியும் வடமொழியிற் பெருகியும் வழங்குவதனாலேயே, வடசொல்லெனக்

கருதப்படுகின்றது.

மதுரை-மதுரா (dh)

மதி-மதிரை. ஒ. நோ: குதி-குதிரை.

அது