உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

"விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே'

(தொல்.உரி.49)

முடை மிடை. மிடைதல் = செறிதல்.

மொ-த்தல் = செறிதல்.

(3) ஒடுங்கல்

ஒடுங்கலாவது நெருக்கமாதல். இரு அல்லது பல பொருள்கள்

ரு

ஒன்றையொன்று நெருங்கும்போது நெருக்கம் உண்டாகும். அதனால் ஒடுக்கம் ஏற்படும். ஒடுக்கம் இடைவெளி யொடுக்கமும், பொரு ளொடுக்கமும், ஒழுக்க வொடுக்கமும் என மூவகை.

உல் உல்லி =ஒடுங்கிய ஆள் உல் உல்லாடி = உல்லி. ஒல்லி. உல் -ஒல் ஒல்லட்டை = ஒல்லி.

உல் உல்கு - (உற்கு) -உற்கம் உக்கம் = ஒடுங்கிய இடை.

உல் -ஒல்-ஒல்கு. ஒல்குதல் - சுருங்குதல்.

-

=

உல்லி -

ஒல்கு ஒற்கம் = ஒடுக்கம், சுருக்கம், தளர்ச்சி. உல் - அல் - அல்கு - அல்குல் = சுருங்கிய இடை. அல்குதல் சுருக்குதல். அல்கு - அஃகு. அஃகுதல் = சுருங்குதல்.

உள் ஒள்

ஒருக்கு எருக்கு.

=

ஒரு ஒருகு ஒருக்கு. ஒருக்குதல் ஒடுக்குதல்.

உள் உடு உடுகு உடுக்கு = இடையிலொடுங்கிய கோடங்கி.

டுக்கு - உடுக்கை.

உடுகு - இடுகு. இடுகுதல் = நெருங்குதல்.

உடுக்குஇடுக்கு - இடுக்கம் = நெருக்கம்.

இடுக்கு = சிறு சந்து. இடுக்கு - இடுக்கல்.

இடுக்குதல் = நெருக்குதல், நெருக்கிப் பிடித்தல் அல்லது ஏந்துதல். பிள்ளையை இடுப்பில் இடுக்குதல் என்னும் வழக்கைக் காண்க.

இடுக்கு - இடுக்கி = நெருக்கிப் பிடிக்குங் கருவி.