உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




X

முதற்றாய் மொழி

மட்டுமன்று; கழிபலவூழிகளாகக் கணக்கற்ற தலைமுறை யாளரால் சிறிது சிறிதாய் ஆக்கப் பெற்றதாகும். இங்ஙனம் ஆக்கப்பெற்ற மொழிகள் உண்மையில் ஒரு சிலவே. அச்சிலவே, அவற்றின் பல்வேறு நிலைகளில் நிகழ்ந்த திரிபு, சுருக்கம், பெருக்கம், கூட்டு, கலப்பு என்னும் ஐம்முறைகளால்; ஏறத்தாழ மூவாயிரம் மொழிகளாகக் கிளைத்து உலகமெங்கும் பரவியிருக்கின்றன. அம்மூல மொழிகளுள் முதன்மையானது தமிழே என்றும், அது தோன்றிய இடம் மாந்தன் பிறந்தகமாகிய குமரிநாடே என்றும், பத்தாண்டிற்கு முன்னரே வெளியிட்டேன். அதை மெய்ப்பிக்கும் வகையில், முதலாவது இந்நூல் வெளிவருகின்றது. அறிஞர் நடுநிலையாய் ஆய்ந்து தெளிக.

தமிழ் எங்ஙனம் ஒன்றன் சார்பின்றித் தானே தோன்றி வளர்ந்துளதென்பது. இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் விளங்காதிருப்பின், அது அடுத்துவரும் செந்தமிழ்ச் சொல்லியல் நெறிமுறைகள், 'வடமொழி வரலாறு' என்னும் நூல்களால் வெள்ளிடை மலையாம்.

பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததினால் ஏது பயன்?

சேலம் 21.2.1949

ஞா. தேவநேயன்