உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

95

அறை பட்டறை என்றும், பட்டும் சாலை பட்டசாலை என்றும் வழங்குதல் காண்க.

முட்டுதல் = தலையாலும் முகத்தாலும் தாக்குதல். முகம் என்றது ஒரு பொருளின் முனை அல்லது முற்பகுதி. முட்டு முட்டியில் வாங்கும்

குண்டடி.

=

=

முட்டு மொட்டு தலையில் வாங்கும் குட்டு. மொட்டுமொட் டென்று தலையிற் குட்டினான் என்பது வழக்கு. கொங்கு நாட்டார் குட்டை மொட்டுக்கா- என்பர்.

இங்குக் காட்டிய சொற்கள் வல்லோசை மிகுமாறு டகரம் இரட்டியவை யாதலின், அவை பெரும்பாலும் கடினமான பொருள் களை வன்மையாகத் தொடுவதையே குறிக்கும். தகரவொலி டகர வொலியினும் மெல்லியதாதலின், தகரமிரட்டிய சொற்கள் சற்று மென்மையாகத் தாக்குவதைக் குறிக்கும். தகரம் தனித்து வருவனவும். டகரம் தனித்தும் மெலியோடு கூடியும் வருவனவும், வருவனவும், மெலி தனித்தும் மெலி தனித்தும் இரட்டியும் வருவனவும், இங்ஙனமே.

குத்துதல் = கையால் உடம்பிற் குத்துதல், உலக்கையாற் கூலத்தைத் துவைத்தல்.

குத்து குற்று.

கும்முதல் = குத்துதல். குமைத்தல் = குத்துதல்.

முண்டுதல் = மெல்ல முட்டுதல்.

மொத்துதல் = உடம்பிற் கையாலும் கருவியாலும் அடித்தல்.

மோதுதல் = முட்டுவதினும் சற்று மெலிதா-த் தாக்குதல்.

கையாலும் உலக்கையாலும் குத்துதல்போல் தொடுதலளவான குத்துதல்களே இங்குக் குறிக்கப்பட்டவை. உள்ளிறங்குமாறு கத்தியாற் குத்துவது போன்றது துளைத்தலியலிற் கூறப்படும்.

ii. முட்டுக் கொடுத்தல்

முட்டுக் கொடுத்தலாவது ஒன்று இன்னொன்றை முட்டித் தாங்கும்படி

செ-தல்.

உள்

அள்

அண் அண்டு. அண்டுதல்

=

நெருங்குதல்,

பொருந்துதல், முட்டுதல்.