உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

தொடு - தொடர் = வரிசை.

அள் - அண் -அணி = வரிசை.

அணி - அணில் = முதுகில் மூவரிசை அல்லது வரியுள்ள அணில்.

அண் - அடு - அடுக்கு - அடுக்கம் - அடுக்கல்.

தொடர் = தொடரி. தொடர் = தொடர்ச்சி. தொடர் = தொடர்வு = தொடர்பு.

தொடு - தொடக்கு தொடக்கி தொடரி. (சங்கிலி, கொடி).

தொடு = தொடல்

தொடலை = மாலை.

தொடு = தொடவு தொடவல் = மாலை.

தொடு - தொடை = மாலை. தொடை தொடையல் = மாலை. (2) முட்டல் துறை

i. வலிதா-த் தொடுதல்

வலிய பொருள்கள் ஒன்றையொன்று வேகமாகத் தாக்குவது வலிதா-த் தொடுதல்.

உதைத்தல் = தாக்குதல், எற்றுதல்.

ஓட்டுதல் = தாக்குதல்.

"மாந்த ருறைநிலத்தோ டொட்ட லரிது”

ட்டுதல் = முட்டியால் தலையைத் தாக்குதல்.

=

(குறள். 499)

குட்டு கொட்டு. கொட்டுதல் முட்டியால் ஒன்றைத் தாக்குதல், குச்சால் பறையை அடித்தல், சுத்தியலால் ஒன்றைத்

கொட்டுப்பிடி, செம்புகொட்டி முதலிய பெயர்களை நோக்குக.

தட்டுதல்.

சொட்டுதல் = தலையிற் குட்டுதல், பறவை ஒன்றைக் கொத்துதல்.

=

(துட்டு) தட்டு தட்டுதல் கையாலுங் கருவியாலும் கொட்டுதல்.

தட்டு தட்டான்.

நொட்டை (யிடுதல்)

சேர்த்துக் கொட்டுதல்.

=

சுவை மிகுதியால் அண்ணத்தில் நாவைச்

பொட்டு -பட்டு. பட்டுதல் என்பது தட்டுதல் என்னும் பொருளில் வழங்கின பண்டை வினைச்சொல்; இன்று வழக்கற்றது. பட்டுதற்கு அடையாக வைத்துக்கொள்ளும் கல் பட்டடை என்றும், பட்டும்