உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

நற்செ-தி, மகளிர் வாழ்க்கை நலத்தின் அடையாளமான அணி (தாலி).

மங்கலம்

இழவாதவள்.

மங்கலை = கணவனொடு கூடி வாழ்பவள், கணவனை

மங்கலம் - மங்கலி = மங்கலை.

மங்கை = மங்கலமாகிய மணப்பருவத்தாள்.

மணத்திற்குரியவர் பதினாறாட்டைப்

பருவத்தானும் பன்னீ

ராட்டைப் பருவத்தாளும் என்று அகப்பொருளிலக்கணமும்,

"மாகவா னிகர்வண்கை

னிகர்வண்கை மாநா-கன் குலக்கொம்பர்

ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்

(சிலப்.1:2-4)

என்று இளங்கோவடிகளும் கூறுதலையும், பன்னீராட்டைப் பருவத் தார் மங்கையெனப்படுதலையும், நோக்குக.

மங்கு மக்கு மக்கல் = ஒளிமழுங்கல்.

xiii. வழித்தல்

மழி - வழி. தலை வழித்தல் முகம் வழித்தல் என்னும் வழக்குக்களைக் காண்க. தலைவழித்தலைத் தலை வறண்டுதல் என்றுங் கூறுவர். வழித்தல் என்பது முண்டித்தல் என்றுமட்டும் பொருள்படும். வறண்டுதல் என்பது தலைமயிரைச் சுறண்டியெடுத்தல்போல் வலிதா வழித்தலைக் குறிக்கும். அது பின்னர்க் கூறப்படும்.

மயிர் பெயர்வது போன்றே தோல் பெயர்வதும் பெயர்வதும் ஒருவகை முண்டனம் அல்லது மொட்டையாதலால், தோலைப் பெயர்ப்பதும் வழித்தல் எனப்படும். மரமுஞ் சுவரும் போன்ற கரடுமுரடான பொருள் உடம்போடு உரசித் தோலைப் பெயர்த்துவிட்டால், 'மரம் வழித்து விட்டது. ‘சுவர் வழித்துவிட்டது' என்பர். கத்தி வழித்தலும் கரடுமுரடான பொருள் வழித்தலும் வினைவடிவில் ஒத்திருத்தலுங் காண்க. வழிதல் என்பது தோல் பெயர்தலாகிய தன்வினையைக் குறிக்கும். வழி - வழல் வழலுதல் = நெருப்பினால் வெந்து தோலுரிதல். வழல் வழற்று வழட்டு. வறற்றுதல் நெருப்பில் வாட்டித் தோலுரித்தல், அல்லது மயிர் நீக்குதல்.

-

=

=

ஓலையால் நாக்கிலுள்ள அசட்டை நீக்குதலும், சீப்பால் தலை மயிரைச் சீவுதலும், மண்வெட்டியால் வா-க்காலிலுள்ள சேற்றை