உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

107

மொழுக்கு - மொழுக்கன் = வேலைப்பாடில்லாத அணி. மழுங்கு மழுங்கன் = வேலைப்பாடில்லாத அணி.

(மொழு) முண்டம்.

மோழை

=

மொட்டை, கொம்பில்லா மாடு, மர அடி

“ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்" என்பது பழமொழி. மோழைமுகம் = (மொட்டை முகமுள்ள) பன்றி, மோழல் = பன்றி. மொண்டு = மொட்டைக்கை, கைக்குறை. மொண்டு

கை குறைந்தவன். மொண்டிமுடம் என்பது வழக்கு.

மொண்டி

=

நொண்டுதல் = குறைந்த காலொடு நடத்தல், ஒரு காலால் நடத்தல் அல்லது தாவிச் செல்லுதல்.

நொண்டு - நொண்டி = நொண்டுதல், நொண்டுபவன், ஓரடி குறுகிய ஈரடிச்சிந்து.

முடம் என்பது வளைவு என்றும், மொண்டி என்பது குறை என்றும் வேறுபாடறிக.

xii. மங்கல்

மங்கல் என்பது உளி மழுங்கல்.

-

மழுங்கு மங்கு - மங்கல்.

மங்கல் நிறம் = மஞ்சள் நிறம். வெள்ளையுமன்றிப் பச்சையு மன்றி இடைநிகர்த்தா- மங்கிய நிறமாகவிருத்தலின். மஞ்சள் நிறம் முதலாவது மங்கல் எனப்பட்டது. மங்கல் மஞ்சல் மஞ்சள். ஒ.நோ: கழங்கு கழஞ்சு.

இலங்குஇலஞ்சு -இலஞ்சி.

மஞ்சல் = மஞ்சள் நிறமுள்ள சரக்கு.

தமிழ்நாட்டில் கணவனோடு கூடி வாழும் பெண்டிர் அழகிற்கும் உடல்நலத்திற்கும் மணத்திற்கும் மஞ்சள் தே-த்துக் குளிப்பது வழக்கமாதலின், மஞ்சட்கும் மஞ்சள் நிறத்திற்கும் மங்கலத்தன்மை ஏற்பட்டுவிட்டது. திருமண வரிசையில் வைக்கப்படும் பொருள் களுள் மஞ்சளும் ஒன்றாகும்.

மங்கல்

மங்கலம்

=

மஞ்சட்பூச்சாற் குறிக்கப்பெறும் மகளிர்

வாழ்க்கை நலம், மஞ்சளாலும் மஞ்சள் நிறத்தாலும் குறிக்கப்பெறும்