உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

தேங்கா-ப்பில்லை முதலிய வழக்குகளைக் காண்க.

பில்

பில்லை

=

துண்டு. சடைப்பில்லை, சந்தனப்பில்லை,

-

பில்லை - வில்லை.

புள் - புரு - பிரு பிருக்கு = சிறியது, சிறு துண்டு. பிஞ்சும் பிருக்கும் என்பது வழக்கு.

பிள்ளைக்கற்றாழை,

பிள்ளைக்கிணறு,

பிள்ளைக் கோட்டை,

பிள்ளைத்தக்காளி, பிள்ளைப்பிறை பிள்ளைப்பெட்டி, பிள்ளை விளாத்தி (குட்டிவிளா) முதலிய புணர்ப்பெயர்களில், பிள்ளை என்பது சிறுமையைக் குறிக்குமேனும், அது இளமைப்பெயரின் ஆட்சி விரிவே என்றறிதல் வேண்டும். குட்டித் தொல்காப்பியம் என்பதில் குட்டி என்பதும் அதுவே.

பிள் - பிட்டு = சிறியது. பிட்டுக்கருப்புக்கட்டி = சிறுகருப்புக்கட்டி. பிள் - பிசு பிசுக்கு = சிறு துண்டு. பிசுக்கு - பிசுக்கி = சிறுபயல். பிசு - பிசுகு. பிசுகுதல் = சிறுதுண்டு கேட்டல்.

பிசுக்கு - விசுக்கு விசுக்குணி (விசுக்காணி) = சிறியது, சிறுதுண்டு.

புள் - பொள் - பொட்டு = சிறியது, சிற்றளவு.

பொள் - பொடி.

முள் முட்டு = சிறியது. முட்டுகள் = சிறுபொருள்கள். முள் -(மள்) - மண் - மணி = சிறியது.

மணிக்கயிறு, மணிக்காடை, மணிக்குடல், மணிக்கை, மணித் தக்காளி, மணிச்சம்பா, மணிச்சுறா, மணிப்பயறு, மணிப்புறா முதலிய புணர்ப்பெயர்களில், மணி என்னுஞ் சொல் சிறுமையைக் குறித்தல் காண்க.

மண்

(பிரமசாரி).

மாண் = குறள், குறளன், சிறுவன், இளைஞன், மணமிலி

"குறுமா ணொருவன் தற்குறியாகக் கொண்டாடும்"

(65. 164 :5)

"மாணாகி வைய மளந்ததுவும் ”

(திவ். பெரியதிரு.8:108)

மாண் - மாணி = சிறியது, சிறுவன், மணவாதான், மாணவன்.