உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

-

முள் விள் விளங்கு விளக்கு - விளக்கம்.

விளங்கு பிறங்கு பிறக்கம் = விளக்கம்.

விள் - (வெள்) - வெட்டு - வெட்டம். வெட்டுதல் = மின்னுதல்.

வெள் - (வெளிச்சு) - வெளிச்சம்.

வெட்ட வெளிச்சம் என்னும் வழக்கைக் காண்க.

iv. நீறாதல்

எல்லாக் கனப்பொருள்களும்

எரியினால்

எரிக்கப்பட்டபின்

நீறாகும். நீறு பூத்த நெருப்பு என்னும் வழக்கை நோக்குக.

கும்பு - கும்பி = சுடுசாம்பல். உள் உண் உடு அடு

அடலை = சாம்பல்.

சும் - சும்பு - (சம்பு) - சாம்பு - சாம்பல் சாம்பர்.

சாம்பு சாம்பான் = பிணத்தைச் சுடுபவன். -

V. கா-ச்சுதல்

அடல் -

நெருப்பில் சுடப்படும் பொருள்களும் உலையிலிட்டுக் கா-ச்சப் படும் பொருள்களும் காயும் அல்லது அவியும்.

உல் - உலை = சமையற்குக் கா-ச்சும் நீர், கொல்லன் நெருப்பு.

கொல்லன் களரியை உலைக்களம் உலைத்தரை என்றும் சமைத்தற்கு நெருப்புள்ள அடுப்பின்மேல் நீரிட்ட கலம் ஏற்றுவதை உலையேற்றுதல் என்றும் கூறுவது காண்க.

உவி - அவி. உவியல் - அவியல்.

(குள் - கள்

காள்)

கா- கா-ச்சு. கா-தல்

=

சுடுதல். கா-ச்சுதல்

=

சுடவைத்தல்.

-

கும் குமை. குமைதல் = புழுங்குதல். கும் - கும்மாயம் = குழைய.

கள் - சுடு.

சுண்டு - சுண்டல் = நீர் சுண்டிய பயறு. சுண்டுதல் = அவித்தல்.

துவர் - துவரம் = துவட்டல்.

துவர் - துவர்த்து - துவட்டு - துவட்டல்.

புள் - புழுங்கு - புழுங்கல்.