உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சும்பு சம்பு சாம்பு. சாம்புதல் வாடுதல்.

சும் - (சுவ்) - சுவறு. சுவறுதல் = நீர்வற்றுதல்.

சுவ்வென்று உள்ளே நீரை இழுக்கிறது என்பது வழக்கு.

சுடு சொடு சொடி. சொடிதல் = வெயிலில் வாடுதல்.

சொடித்தல் = வற்றுதல். சோடை = வறட்சி.

துவர்தல் = உலர்தல். துவர் = விறகு, சருகு.

துவர் - துவர்த்து - துவட்டு. துவர்த்துதல் = ஈரம் புலர்த்துதல்.

(துவ்) - துவி - தாவம்.

(துவ்) - (துகு) - தகு - தகை = தாகம். தகு - தாகம்.

புல் - புலர். புல் பொல் பொலு. பொலுபொலுத்தல் = நன்றாகக் காதல்.

பொல் - (பொரு) - பொருக்கு = கா-ந்த சோற்றுப்பருக்கை.

முள் முளி. முளிதல் = கா-தல், உலர்தல்.

vii. செந்நிறம்

நெருப்பானது சிவந்த நிறமாயிருப்பதால், நெருப்பின் பெயர்களி னின்றும் அப் பெயர்களின் அடிகளினின்றும் செந்நிறத்தைக் குறிக்கும் சொற்கள் திரிந்துள்ளன. இளங்கோவடிகள்,

99

"எரிநிறத் திலவம் "

என்று கூறுதல் காண்க. எரிமலர் = முருக்குமலர் (சீவக. 662). எரிமலர் = செந்தாமரை (சீவக. 2741).

(சிலப். 5:214)

உல் - அல் - அலத்தம் - அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு.

அல் - அர் - அரன் = சிவன் (செந்நிறத்தான்.)

தமிழருள் ஒரு சாரார் இறைவனைத் தீவடிவினனாகக் கருதிய தால், அவனை அரன் என்றும் சிவன் என்றும் பிறவாறும் அழைத்தனர்.

அர் - அரக்கு = சிவந்த மெழுகு.

=

அர் - அரத்தம் அரத்தம் = சிவப்பு, குருதி. அரத்தம் - அத்தம் = சிவப்பு. அத்தம் - அத்தி = சிவந்த கனிதரும் மரம்.

அர் - அருணம்

=

=

சிவப்பு. அருணன் = காலைச் செங்கதிரோன். அருணமலை = சிவன் அழற்பிழம்பாக நின்ற மலை. அருணமலை அண்ணாமலை.