உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

145

நாட்டுப்புறத்து மக்கள் இன்றும் தாமரையைத் தாம்பரை என்றே என்பது

வழங்குவர். தாமரை

என்பது

செம்மலரையும் முளரி

வெண்மலரையும் தொடக்கத்திற் குறித்ததாகத் தெரிகின்றது.

துள் - (தள்) - தளவு - தளவம் = செம்முல்லை.

தும் - (துவ்) - துவர் = சிவப்பு, காவி, பவழம், பாக்கு, காசுக்கட்டி.

துவர்ப்பு = சிவப்பு, காசுக்கட்டி, அதன் சுவை.

துவர் - துவரி = காவி, இலவம்பூ.

துவரித்தல் = செந்நிறமூட்டுதல்.

துவர் - துவரை = செம்பயறு.

துவரை - தோரை = செங்கா-ப்பனை, அரத்தம்.

துவர் - தோர். நெ - + தோர் = நெ -த்தோர் = அரத்தம்.

துவர் - துகிர் = பவழம்.

துவள் - துவண்டை = காவியுடை.

அரன், சிவன், சேந்தன், சேயோன், சொக்கன் என்பன ஒரு பொருட் சொற்கள். கரியோன், கண்ணன், மாயோன், மால் முதலியவை திருமாலையும்; கரியோள் (கருப்பா-), காளி, மாயோள், மாரி முதலியவை காளியையும்;

கருமைபற்றிக்

குறிக்கும்

ஒருபொருட் சொற்களாயிருத்தலை நோக்குக. சொக்கன் என்பது அழகன் என்று பொருள்படுமேனும், சிவனைக் குறிக்கும்போது அப் பொருள் படாது.

viii. தெரிதல்

விளங்கும் (ஒளிரும்) பொருள்கள் தெளிவாகத் தெரிதலால், விளக்கத்தைக் குறிக்கும் சொற்கள் தெளிவாகத் தெரிதலைக் குறிக்கும்.

துலங்குதல் = விளங்குதல், தெளிவாகத் தெரிதல்.

துல் தெல் தென். தென்படுதல் = தெரிதல், தோன்றுதல், புலப் படுதல்.

துளங்குதல் = விளங்குதல்.

"துளங்கு மிளம்பிறை யாளன்'

(65. 88:10)

துளங்கொளி = மிக்கவொளி. துள் - துண் - துணி = ஒளி (பிங்.).

துள் - தெள். தெள்ளுதல் = விளங்குதல், தெளிவாதல்.