உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

7

உலக முதற் பெருமொழியாக்கம் மிக மெல்ல நடைபெற்றிருக்கு மாதலானும், அதன் பின்னிலைகளினும் முன்னிலைகள் அமைதற்கு நீண்ட காலஞ் சென்றிருக்கு மாதலானும், நிமிர்ந்த குரங்குமாந்தன் (p.e.) காலம் கி.மு. 500,000 என்று மாந்தனூல் வல்லார் கூறியிருத்த லானும், தமிழ்மொழி குறிப்பொலி நிலையினின்று நால்வகைச் சொன்னிலையும் அடைதற்கு, ஏறத்தாழ ஓரிலக்கம் ஆண்டுகள் சென்றிருத்தல் வேண்டும். அதன் திருந்திய மொழிநிலை கி.மு. 25.000 ஆண்டுகட்கு முன்னரே ஏற்பட்டிருத்தல் வேண்டும்.

தமிழ் முதற்றா-மொழி யென்பதற்குக் காரணங்கள்

(1) மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி யுள்ளமை.

(2) இதுபோதுள்ள மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையான தாயிருத்தல்.

(3) தமிழ் எளிய வொலிகளைக் கொண்டிருத்தல்.

(4) தமிழிற் சிறப்புப்பொருள் தருஞ் சொற்கள் பிற மொழிகளிற் பொதுப்பொருள் தருதல்.

எ-டு: செப்பு (தெ.), தா (இலத்தீன்).

(5) தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி யுடைமை (செயற்கை யான

சொல்வளர்ச்சியின்மை).

(6) ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்துக் கொண்டிருத்தல்.

(7) பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதுஞ் சிறிதும் ஒத்திருத்தல்.

(8) தா-தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கிவருதல்.

(9) தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்திலின்மை.

(10) ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

(11) சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழி கட்கும் பொதுவாயிருத்தல்.