உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(12) பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல்.

எ-டு: இல் (தெலுங்கு), மனை (கன்னடம்), அகம் (கிரேக்கம்), குடி (பின்னியம்).

(13) பிறமொழிகட்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களின் மூல நிலைகள் தமிழிலிருத்தல். (எ-டு) ஆரிய மொழிகளின் அசை யழுத்தமும் சித்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போல்வன. பெரும்பான் மொழிகள் தமிழை ஒவ்வாதிருத்தற்குக்

காரணங்கள்

தமிழ் முதற்றா-மொழியாயினும், பெரும்பான் மொழிகள் அதை ஒத்திருக்கவில்லை. அதற்குக் காரணங்களாவன:

(1) குமரிக்கண்டத்தில் மொழி தோன்று முன்னமே, சில மாந்தர் கூட்டங்கள் வெவ்வேறு திசையிற் பிரிந்து சென்று, ஆங்காங்கு வெவ்வேறு முறையில் ஒவ்வொரு சிறுமொழி வளர்த்துக்கொண்டமை.

(2) தமிழின் நால்வகை நிலையிலும் மக்கள் குமரிக்கண்டத் திலிருந்து வெவ்வேறிடம் பிரிந்து சென்றமையும், அவர்கள் மொழிகள் பலவகையில் திரிந்துபோனமையும்.

(3) குமரிக்கண்டத்திலிருந்து பிரிந்து சென்ற மக்கள், சென்ற தேயத்துச் சூழ்நிலைக்கேற்பப் புதுச்சொற்களை ஆக்கிக்கொண்ட பின், இன்றியமையாத அடிப்படைச் சொற்கள் தவிர ஏனைய தமிழ்ச் சொற்களெல்லாம் வழக்கின்றி மறைந்து போனமை.

(4) ஏறத்தாழ ஐம்பான் சொல்லாலும் அறுபான் சொல்லாலும் தம் கருத்துகளையெல்லாம் தெரிவிக்கும் அரை நாகரிக நாடோடிச் சிறு குல மாந்தர், அடிக்கடி தம் மொழியை அடியோடு மாற்றிக்கொண்டி ருந்தமை.

(5) போராலும் வலக்காரத்தாலும் வெல்லப்பட்ட மக்கள். வென்ற மக்களின் மொழியை முற்றும் அல்லது பெரும்பாலும் மேற்கொண்டமை.

(6) மொழிகள் மேன்மேலுந் திரிந்துகொண்டே வந்தமை. மொழிகள் மாந்தன் அமைப்பே

மொழிகள் என்றுமுள்ளவை யென்றும், இறைவனால் படைக்கப் பட்டவை யென்றும், இயற்கையா- அமைந்தவை யென்றும், சில