உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

9

மொழிகள் தேவமொழி யென்றும்; பல தவறான கருத்துகளை இன்றும் பல இந்தியர் கொண்டுள்ளனர்.

மொழிகளெல்லாம் படிப்படியாகவும் சிறிது சிறிதாகவும் மாந் தனால் வளர்க்கப்பெற்றவையே. அவற்றுள் அவற்றுள் ஒருசில தனித்தனி யெழுந்த தனிமொழிகள்; ஏனைய இரண்டும் பலவும் கலந்த கலவை மொழிகள். உலகிலுள்ள மொழிகளெல்லாம் மக்கள் மொழிகளே.

மொழிகள் மாந்தன் அமைப்பே யென்பதற்குக் காரணங்களாவன:

(1) மொழியில்லாத அநாகரிக மாந்தர் இன்றும் சில மலை களிலும் காடுகளிலும் வாழ்ந்துவருதல்.

(2) மொழியுள்ள மக்களின் பிள்ளைகளெல்லாம், தம் பெற்றோர் மொழியை, அவரிடத்தும் பிறரிடத்தும் சிறிது சிறிதாத் தம் பிள்ளைப் பருவத்திற் கற்றே பேசப் பழகுதல்.

குழவிப் பருவத்திலேயே மக்கட் கூட்டத்தினின்று பிரிக்கப் பட்டு, பேச்சுக் கற்கும் வா-ப்புச் சிறிதுமில்லாமல் வளர்க்கப்படும் எந்த ஆடவனும் பெண்டும், ஒரு மொழியும் பேசாது ஊமையா-த் தானிருக்க முடியும், பிறவிச் செவிடர் எல்லாரும் ஊமையராயிருத் தலை நோக்குக.

(3) மொழிகள், அவற்றைப் பேசும் மக்களின் நாகரிக அளவிற் கேற்ப வளர்ச்சியடைந்திருத்தல்.

(4) இருமொழியும் பல மொழியும் கலந்து பல கலவை மொழிகள் ஒருசில நூற்றாண்டுகட்கு முன் புதிதா-த் தோன்றியிருத்தல்.

(5) பல மொழிகள் வரவர வளர்ச்சியடைந்து வருவது வரலாற்றா லறியப்படல்.

(6) மொழிகள் பலவாயிருத்தல்.

இறைவன் படைப்பாகவாவது

இயற்கை யமைப்பாகவாவது

மொழியிருந்திருப்பின், ஒரேயினமான உலக மக்கட்கெல்லாம் ஒரே மொழியே யிருந்திருத்தல் வேண்டும்.

(7) கற்கப்படாத மொழிகள் ஒருவனுக்கு விளங்காமை.

மொழிகள் இறைவன் படைப்பாகவாவது இயற்கையமைப்பாக வாவது இருந்திருப்பின், எல்லா மொழியும் எல்லார்க்கும் இயல்பாகவே தெரிந்திருத்தல் வேண்டும்.