உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

11

முதற்கால மாந்தர் உணவுப்பொருள்களைப் பச்சையாகவே உண்டு வந்தனர்; அதன்பின் சுட்டுண்ணக் கற்றனர்; அதன்பின் முறையே, அவித்துண்ணவும், உப்பிட்டவித்துண்ணவும், மசாலை யென்னும்

கறிச்சரக்குச் சேர்த்துக் குழம்பு கூட்டு சாறு முதலியன கா-ச்சவும், வறுவல் பொரியல் சுண்டல் புழுக்கல் முதலிய முறை களைக் கையாளவும், அற்றைப் பலகாரஞ் செ-யவும், நீண்டநாட் பலகாரஞ் செ-யவும், கற்றனர். இவற்றிற்குச் சென்ற காலம் எத் துணையோ வூழிகளாகும். ஆயின், இன்றோ, பன்னீடூழிகளாகப் படிப் படியா- வளர்ந்துவந்த மடைக்கலையை, ஒருவர் சின்னாளில் முற்றும் பயின்றுகொள்கின்றனர்.

இங்ஙனமே, மாந்தன் தோன்றியதிலிருந்து கழிபல வூழிகளாக வளர்க்கப்பட்ட கருத்தறிவிப்புக் கலையாகிய மொழியும், இன்று ஒவ்வொருவராலும் பெற்றோர் மற்றோர் வாயிலாகப் பிள்ளைப் பருவத்திற் கற்கப்படுகின்றது. ஆயின், இற்றை மொழிநிலை என்றும் இருந்திலது. முதலாவது, விலங்கும் பறவையும் போலப் பல்வேறு குறிப்பொலிகளாலேயே மாந்தர் தம் கருத்தைத் தெரிவித்து வந்தனர். பின்பு, அக் குறிப்பொலிகள் சொன்னிலை யெ-தின. அச் சொற்கள், முற்கூறியவாறு, முறையே அசைநிலை புணர்நிலை பகுசொன்னிலை கொளுவுநிலை ஆகிய நால்வகை நிலைகளை அடைந்தன. அதன் பின், தனிச்சொல்லும் (simple word)கூட்டுச்சொல்லும் (compound word) ஆன சொற்களின் பெருக்கம் ஏற்பட்டு, மொழியானது இற்றை நிலையடைந்தது. இங்குக் கூறப்பட்ட ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு பேரூழி சென்றதென்பதை அறிதல் வேண்டும்.

கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தலைச்சங்கத் தமிழ் முத்தமிழாயிருந்ததனால், அம் முத்தமிழும் ஒன்றுசேரற்கும், அவற் றுக்கு மூலமான இயற்றமிழின் இலக்கணம் அமைதற்கும், அவ் விலக் கணத்திற்கு மூலமான இலக்கியம் எழுதற்கும், அவ் விலக்கியத்தின் சிறந்த வடிவான செ-யுள் தோன்றற்கும், அச் செ-யுட்கு மூலமான உரைநடை அல்லது மொழி தோன்றற்கும், எத்துணையோ வூழிகள் சென்றிருத்தல் வேண்டும்!