உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

இடத்தையும் தொட்டடையும். தொடுதல் என்பது, மெலிதா-த் தொடுதல் வலிதா-த் தொடுதல் என இருபாற்பட்டு, தீண்டுதல், தழுவுதல், முட்டுதல், குத்துதல், உறைத்தல் முதலிய பல கருத்துகளைத் தழுவும்.

தொடுதற் கருத்தினின்று கூடற் கருத்துப் பிறக்கும். கூடல் என்பது ஒன்றிய கூடல், ஒன்றாக் கூடல் என இருவகை. மண்ணொடு மண்ணும் நீரொடு நீருங் கூடுவது ஒன்றிய கூடல்; உடலொடு உடலும் கூலத்தோடு கூலமுங் கூடுவது ஒன்றாக்கூடல். ஒன்றாக்கூடல் மீண்டும் தொட்டுக் கூடல் தொடாது கூடல் என இருதிறத்தது.

கூடற் கருத்தினின்று வளைதற் கருத்துப் பிறக்கும். ஒன்றாக் கூடலில், சில பொருள்கள் வளைவதுண்டு. ஒன்றையொன்று முட்டிய ருபொருள்கள் ஒன்றாதவையாயின், அவற்றுள் மெலியது கம்பி போல் நீண்டிருப்பின் வளையும். கல்லைமுட்டிய வேரும் கடினமான பொருளை முட்டிய ஆணியும் வளைதல் காண்க. வழிச்செல்வோன் தெருவடைத்த சுவரை முட்டித் திரும்புவதும், வேற்றிடஞ் சென்றவன் வினைமுற்றி மீள்வதும், அணிவகையில் வளைதலின்பாற்படும். வளைதல் என்பது சா-தல், கோணல், திருகல், வட்டம், சுற்றல், சூழ்தல், உருட்சி, சுழற்சி முதலிய பல கருத்துகளைத் தழுவும்.

"

கூடற் கருத்தினின்று பிறக்கும் மற்றொரு கருத்துத்துளைத்தற் கருத்தாகும். முட்டிய பின் வளையாத வலிய பொருள், தான் முட்டி யதைத் துளைத்தும் செல்லும். ஆணி சட்டத்தையும், வண்டு மரத்தை யும், பூச்சி பொத்தகத்தையும், மாந்தன் மலையையும் துளைக்கலாம். துளைத்தல் என்பது குழித்தல், தோண்டுதல், துளையிடுதல், புகுதல், துருவுதல் ஆகிய பல கருத்துகளைத் தழுவும். துளைத்துப் புகுதலும், துளைக்குட் புகுதலும் எனப் புகுதல் இருவகைத்து. உயிரிகள் தத்தம் உறைவிடத்திற்குட் புகுதல் துளைக்குட் புகுதலாகும். ஒன்றைத் துருவிய பொருள் இறுதியில் வெளிப்படும். அது தோன்றல் அல்லது முன்வருதல் போன்றதாகும். அதன்பின் நிகழக்கூடியவை, தோன்றல் முதல் துருவல்வரை கூறியுள்ள பல நிகழ்ச்சிகளே. இவை ஒரு பொருளின் காலமெல்லாம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே யிருக்குமாதலின், ஊகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சி முற்றுறும் எல்லை துருவற்கருத்தே. ஆகவே, தோன்றல் முதல் துருவல்வரையுள்ள கருத்துகளெல்லாம் ஒரு சுழல் சக்கரமாதல் காண்க.