உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உது

உதோ! (உந்தோ! உதா! உந்தா!).

உது = முன்னிலையிலுள்ளது.

உது உதோ

யிடத்தில்.

உதோள் - உதோளி = (உவ்விடத்தில்) முன்னிலை

ஊங்கு = முன்னிலையில், முன்பு.

=

உங்கு = முன்னிலையில். உங்கு -உங்கா.

(ஊங்கு - ஊங்கண்

உங்கண்

உவ்விடம், உவ்வாறு).

(உங்கன்) உங்ஙன்

-

உங்ஙனம் =

உந்த = முன்னிலையிலுள்ள. (உந்த + இடம் = உந்திடம்)

(உன்ன) = முன்னிலையிலுள்ள, உத்தகைய.

உவ் உவன் = முன் நிற்பவன், உவ் உவ உவை = முன்நிற்பவை.

குறிப்பு: ஊ என்பது முதற்காலத்தில் பெயரும் பெயரெச்சமும் குறிப்பு வினையெச்சமுமாகிய சுட்டுச் சொல்லாக வழங்கிற்று.

(2) முன்னிலைப் பெயர்

ஒருமை

ஊன்

நூன்

நீன்

பன்மை

ஊம் (முதல் நிலை) நூம் (இரண்டாம் நிலை) நீம் (மூன்றாம் நிலை)

முன்னிலைப் பெயரின் வேற்றுமையடி

ஒருமை

பன்மை

ஊன் - உன்

ஊம் - உம்

நூன் - நுன்

நூம் - நும்

நீன் - நின்

நீம் - நிம்

குறிப்பு;

(1) மூவிடப் பதிற்பெயர்களும் நெடுமுதல் குறுகியே வேற்றுமை யேற்கும். முதற்காலப் படர்க்கைப் பதிற்பெயர் தான் தாம் என்பன. பின்பு அவை தற்சுட்டுப் பெயராயின.

(2) மூவிடப் பதிற்பெயர்களிலும், னகரவீறு ஒருமையையும் மகரவீறு பன்மையையும் உணர்த்தும்.