உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

39

அவை ஆளப்பெற்ற நூல்கள் இறந்துபட்டமையாலும், அவற்றை இன்று காட்டற்கில்லை. ஆயினும், அவற்றின் முன்னுண்மை, ஊகிப்பு ஒப்பு ஆகிய இருவகையளவைகளான் உணரப்படும். மறைந்துபோன சொற்கள் சில, தொடர்பு குறித்தற்குக் காட்டப்பட்டவிடத்துப் பிறைக் கோட்டுள் இடப்பட்டுள.

வகரம் உகரத்தோடு கூடி மொழி முதல் வரும் எழுத்தன்மையின், உகரச்சுட்டுச் சொற்கள் வகர முதலவாயிருக்குமாயின், அவை பகர மகரச் சொற்களின் திரிபென்றே அறிதல் வேண்டும்.

எ-டு: பண்டி - வண்டி, முழுங்கு - விழுங்கு. முடுக்கு - விடுக்கு. பண்டி என்னுஞ் சொல் புல் என்னும் கிளையடியினின்று பிறந்ததாகும். இது ஊகாரச் சுட்டுப்படலத்தில் வளைதலியலில் விளக்கப்படும். ஆண்டுக் காண்க.

உ-ஊ

என்பது உகரமோனையுயிர்

இதிலுள்ள எவ்வெழுத்து மொழிமுதல் வரினும் ஒன்றே.

வரிசையாதலால்,

ஈகாரச்சுட்டு, உல் என்னும் மூலவடிக்கும் குல் சுல் முதலிய கிளையடிகட்கும் ஒப்பாக, ஒழுங்கான இனப்பெருக்க அடிகளைத் தோற்றுவித்திலது. ஆயினும், சில மெ-களோடு கூடிச் சில கருத்துப் பற்றிய சொற்களைப் பிறப்பித்துளது.

ஆகாரச்சுட்டு அதுவுமின்றிச் சுட்டுக் கருத்தொன்றே பற்றி நின்று, சில சுட்டுச் சொற்களைமட்டும் பிறப்பித்துளது.

வடமொழியில் வழங்குந் தமிழ்ச்சொற்கள் இந் நூலின் இடை யிடை வருங்கால், அவற்றை வடசொல்லென மயங்கற்க. வடமொழி ஒரு தனி மொழியன்று என்பதும், அது தென்மொழி வழிப்பட்டதென் பதும், ‘வடமொழி வரலாறு' என்னும் நூலில் விளக்கப்பெறும். தமிழைத் தமிழ் வாயிலாகவன்றி வடமொழி வாயிலாக வுணர்தல் கூடாது.

ஊள =

உ=

3. ஊகாரச் சுட்டுப் படலம்

(1) முன்மையியல்

(1) முன்மைச்சுட்டு

முன்னிலையிலுள்ள.

முன்னிலையிலுள்ள

(உன்னா! = உதோ!)